பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா... டெபாசிட் கூட கிடைக்காது... டிடிவி. தினகரன் ஆரூடம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா?.. தினகரன் ஆரூடம்- வீடியோ

    திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூறமுடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

    நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார்.

     தம்பிதுரை விரக்தி

    தம்பிதுரை விரக்தி

    மேலும், அவருக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர் செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார். அந்த விரக்தியில் தம்பிதுரை பலவாறு பேசி வருகிறார்.

     மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்

    மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்

    திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி இப்போதும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

     தி.மு.க. பயப்படுகிறது.

    தி.மு.க. பயப்படுகிறது.

    தி.மு.க., மெகா கூட்டணி, எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

     உண்மையை கண்டறிய வேண்டும்

    உண்மையை கண்டறிய வேண்டும்

    கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+