பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மார்ச் 28 வரை முக்கிய மாற்றம்
திருச்சி: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மயிலாடுதுறை-திண்டுக்கல் பயணிகள் ரயில் (56821/56822) திருச்சி-திண்டுக்கல்-திருச்சி இடையேயும், திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரயில் (56829 / 56830) மானாமதுரை-ராமேசுவரம்-மானாமதுரை வரை மார்ச் 28 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருநெல்வேலி-திண்டுக்கல்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56826/56822) மயிலாடுதுறை-திண்டுக்கல்-திருநெல்வேலி பயணிகள் ரயில் (56821/56825) விருதுநகா்- திருநெல்வேலி -விருதுநகா் வரையில் மார்ச் 22 முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல், திருநெல்வேலி-ஜம்மு விரைவு ரயில் (16787) 50 நிமிஷங்கள் தாமதமாக மார்ச் 20, 23, 27 ஆகிய நாள்களில் வந்தடையும். கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரயில் 4 மணி நேரம் தாமதமாக மார்ச் 24 ஆம் தேதி திருச்சியை வந்தடையும். கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயில் (12666) மார்ச் 28 ஆம் தேதி 1.55 மணி நேரம் தாமதமாக திருச்சியை வந்தடையும். அதுபோல், திண்டுக்கல்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56822) மார்ச் 17, 19, 21 ஆகிய நாள்களில் 2.15 மணி நேரம் தாமதமாக திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
மேலும், காரைக்குடியிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் காரைக்குடி-திருச்சி டெமு பயணிகள் ரயில் (76840) மார்ச் 28 ஆம் தேதி 70 நிமிஷங்கள் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1 மணிக்கு திருச்சியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications