ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.. சின்னக்காவை தூக்கியடித்த பெரியக்கா! வெலவெலக்க வைக்கும் வெங்காய விலை
திருச்சி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழையும், வெயிலுமாக இருந்து வரும் நிலையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக பெரிய வெங்காயத்தின் விலை சின்ன வெங்காயத்தின் விலையை விட அதிகரித்துள்ளது.
மழைக்காலம் வந்து விட்டாலே போதும் இல்லத்தரசிகளுக்கு எந்த கவலை வருகிறதோ இல்லையோ.. தக்காளி, காய்கறிகள், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு அவர்களை பெரும் கவலையில் ஆழ்த்தி விடும்.

வரத்து குறைவு தேவை அதிகரிப்பு இடைத்தரகர்கள் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வெங்காயத்தின் விலை உச்சம் தொடும் கடந்த ஆண்டுகளில் தங்கத்தைப் போல வெங்காயத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
வெங்காயத்தில் பெரிய வெங்காயம் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் இல்லாமல் பெரும்பாலான உணவுப் பொருட்களை சமைக்க முடியாது. சாம்பார், புளி குழம்பு, மாமிசம், ஏன் சட்னி வகைகளுக்கு கூட வெங்காயத்துடன் சேர்ந்து சமைத்தே மக்கள் பழகி விட்டனர். மகாராஷ்டிரா உள்ளிட்ட சில பல மாநிலங்களிலும் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல், தேனி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் சிங்கப்பூர், இலங்கை மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விலை 100 ரூபாயை கடந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கவு நிலையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய வெங்காய மார்க்கெட் இருக்கும் நிலையில் தரத்தை பொறுத்து 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையாகிறது. மேலும் தொடர்ந்து வரத்து குறைந்து வந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலும் மழையுமாக இருக்கும் நிலையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தான் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும்.
ஆனால் தற்போதே திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக பெரிய வெங்காயத்தின் விலை சின்ன வெங்காயத்தின் விலையை விட அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் திருச்சியில், திருச்சியில் சின்ன வெங்காயம் மொத்த விலையில், முதல்தரம் 55 ரூபாய்க்கும், 2ஆம் தரம் 40 ரூபாய்க்கும், 3ஆம் தரம் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பெரிய வெங்காயத்தை பொறுத்தவரையில் முதல் தரம் ரூ.60க்கும், 2ஆம் தரம் ரூ.40க்கும், 3ஆம் தரம் ரூ.25க்கும் விற்பனையாகிறது. இது மொத்த விலை தான். சில்லறை விற்பனை மற்றும் கடைகளில் ரூபாய் 10 முதல் 15 வரை கூடுதலாக விற்பனையாகும். இதனால் இல்லத்தரசிகள் பலரும் கவலையடைந்துள்ளனர். வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications