குடிச்சிட்டு வந்து மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்.. வெந்நீரை ஊற்றி கொடூரமாக கொன்ற மனைவி
திருச்சி : குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அந்த இளைஞரின் மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
அந்த இளைஞர் மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த இளைஞருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மாமியாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

மருமகன் கொடுமை
மருமகனின் கொடுமையை தாங்காமல் மாமியார் தனது மகளிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்திருக்கிறார் ஆனாலும் அந்த இளைஞர் மது குடித்து விட்டு வந்து மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்

மாமியாருக்கு தொந்தரவு
இதனால் மனம் வெறுத்த போன மாமியாரும்,மனைவியும் இனி பாலியல் தொந்தரவு கொடுத்தால், ஒரேடியாக கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அந்த இளைஞர் மாமியாருக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

ஊற்றிய மனைவி
இதில் ஆத்திரம் அடைந்த தாயும், மகளும் கொதிக்கும் வெந்நீரில் மிளகாய்பொடி கலந்து இளைஞர் மீது ஊற்றினர். இதில் அவரது உடல் வெந்தது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

திருவெறும்பூர்
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி வியாழக்கிழமை காலையில் உயிரிழந்தார். இதையடுத்து புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மாமியாரையும், மனைவியையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் வெந்நீர் ஊற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications