பேஜ் டூ பேஜ் போகாதுண்ணே! பேஸ்புக் லைவ் கூட போட தெரியாதா? விசிக நிர்வாகியிடம் திருமாவளவன் டென்ஷன்
திருச்சி: தனது பேஸ்புக்கில் லைவ் போடும்படி கூறியதற்கு பேஜ் டூ பேஜ் போட முடியாது தலைவரே என கூறி நிர்வாகி ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை டென்ஷனாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தான் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போதும் சரி, மேடையில் பேசும் போது சரி தனது பேஸ்புக் பக்கத்தில் லைவாக வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தனது எழுச்சியான பேச்சுகளை லைவாக போட்டதன் மூலம் பல இளைஞர்களை கவர்ந்துள்ளார். இவரது பேச்சை கேட்டு பலர் விசிகவில் இணைந்துள்ளனர். திருமாவளவனை பாலோ செய்கிறார்கள்.
திருச்சி
அந்த வகையில் திருச்சியில் இன்று நிருபர்களை சந்திக்க தயாரானார். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒரு நிர்வாகியிடம் பேஸ்புக்கில் லைவ் போடும்படி கூறினார். ஆனால் அந்த நிர்வாகியோ பேஜ் டூ பேஜ் போட முடியாது, உங்க இது என்னோடதுல எப்பயும் போடமுடியாது என்கிறார்.
பேஸ்புக் ஐடி லைவ்
இல்லைப்பா எனது ஐடியில் போய் லைவ் போடலாம் என்கிறார். அதற்கு அந்த நிர்வாகி அதுதான் தலைவரே பேஜ் டூ பேஜ் போக முடியாது என்கிறார். உடனே திருமாவளவன் கோபமடைகிறார். பின்னர் யாரிடமோ செல்போனில் பேசுகிறார். அப்போது நான் திருச்சி வருவது தெரியும்ல. ஏன் பேஸ்புக் லைவிற்கு ஏற்பாடு செய்யவில்லை என்கிறார்.
தொல் திருமாவளவன்
இதையடுத்து மற்ற நிர்வாகிகளிடமும் பேஸ்புக்குக்கு போங்க, தொல் திருமாவளவன் என்பதை ஓபன் செய்ங்க என்கிறார். அவர் சொல்வது இவர்களுக்கு புரியவில்லை, இவர்கள் கேட்கும் பாஸ்வேர்டு அவருக்கு புரியவில்லை.
ஐடி லாகின்
அப்போது பின்னால் இருக்கும் நபர், தலைவரின் ஐடியை லாகின் செய்து பாஸ்வேர்டு போட்டு உள்ளே செல்லலாம் என்கிறார். அப்போது பக்கத்தில் இருந்த நிர்வாகியின் போனை வாங்கி திருமா பார்க்கிறார்.
பேஜ் டூ பேஜ்
அப்போது மீண்டும் அந்த நபர் page to page போகாது என சொல்ல திருமாவளவன் டென்ஷன் ஆகிறார். பிறகு திருமாவளவன் அவரது ஐடியை ஓபன் செய்து அவர் பேசிய வீடியோக்களை பார்க்கிறார். அப்போது அந்த நிர்வாகியிடம் "லாரன்ஸுக்கு தெரிந்தது கூட உனக்கு தெரியலை! பேசாம உன் பொறுப்பை லாரன்ஸுக்கு கொடுத்துட வேண்டியதுதான். லாரன்ஸ் நீ எடுத்துக்கோபா என்கிறார் திருமா.
திருமா சிரிப்பு
அதற்கு லாரன்ஸும் கடைசியில் அதுதான் ஆக போகிறது என சொல்ல திருமா சிரிக்கிறார். அந்த நபரும் எல்லாரும் அதுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என சொல்கிறார். கடைசி வரை நேரலையை பதிவிட முடியாமல் திருமா திணறினார்.
பேஸ்புக் லைவ் கூட போட தெரியாதா
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு எம்பியாக இருந்து கொண்டு பேஸ்புக் லைவ்வை எப்படி போடுவது என்பது கூட தெரியாதா என பலர் கமென்ட் போட்டு வருகிறார்கள். அது போல் ஏன் இவர் போனில் பேஸ்புக் இருக்குமே அதையே ஓபன் செய்து கூட லைவ் போடலாமே, இது கூடவா தெரியாது என்கிறார்கள். ஒரு வேளை அவருடைய போனை அவருடைய செயலாளர்கள் யாராவது வைத்திருந்தார்களா என தெரிவில்லை.
ப்ளூசட்டை மாறன் கிண்டல்
இது குறித்து புளூசட்டை மாறன் கிண்டல் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் பேஜ் டூ பேஜ், பேஸ்புக் லைவ் என போட்டு கடைசி வரை தீராத அக்கப்போர் என வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications