நடுவானில் இன்ஜின் கோளாறு.. உடனே சுதாரித்த விமானிகள்.. திருச்சியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!
திருச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி கிளம்பியது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்தனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், அருகில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து திருச்சி விமான நிலையம் நோக்கி வந்த விமானத்திலிருந்து, அவசரமாக தரையிறங்க விமானிகள் அனுமதி கோரினர். திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அதற்குள்ளாக மீட்பு படையினரும் உடனடியாக விமான ஓடுதளம் அருகே விரைந்தனர். இதைத்தொடர்ந்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 167 பயணிகளும் எவ்வித பாதிப்பு இன்றி பத்திரமாக தரையிறங்கினர்.
இந்த அவசர தரையிறக்க நிகழ்வின்போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு மீட்புப் படையினர் முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தின் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளை வேறு விமான மூலம் பெங்களூருக்கு அனுப்பவும் ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருவனந்தபுரம் - பெங்களூர் செல்லும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சிராப்பள்ளிக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூருக்கு விமானத்தை இயக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, பெங்களூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், அதன் துணை மின் பிரிவில் இருந்து தீ எச்சரிக்கை வந்ததால் டெல்லிக்குத் திரும்பி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 175 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications