இந்த தாடியா... அந்த தாடியா ஜெயலலிதா பாணியில் மக்களிடம் கேட்ட கமல்ஹாசன்
லேடியா, அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப்போல இந்த தாடியா, அந்த தாடியா என நான் கேட்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திருச்சி: நான் பாஜகவை திட்டிக்கொண்டே இருக்கிறேன் அவர்கள் எப்படி எனக்கு பணம் தருவார்கள் என்று கேட்ட கமல்ஹாசன், ஜெயலலிதா கேட்ட மோடியா லேடியா என்ற வசனத்தை கொஞ்சம் மாற்றி இந்த தாடியா? அந்த தாடியா என்று கேட்டுள்ளார். திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆளும் அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராகவும் பேசினார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது. பிரச்சார வியூகங்கள் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு வேட்பாளர் தோசை சுட்டு வாக்கு சேகரித்தால் மற்றொருவர் மீன் சுட்டு கொடுக்கிறார். சிலரோ கட்டடம் கட்ட சாந்து சட்டி சுமக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் களத்தில் முதன் முறையாக களமிறங்கியுள்ள கமல்ஹாசனின் பிரச்சார பணியும் கொஞ்சம் புதுமையாகவே இருக்கிறது.

செல்பி ஸ்டைல்
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும் முதல்வர் வேட்பாளர் என்பதால் பல தொகுதிகளிலும் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் கமல் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்.

ஏழ்மையின் மீது கோபம்
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஏழைகளின் மீது எனக்குக் கோபம் இல்லை; ஏழ்மையின் மீதுதான் கோபம் வருகிறது என்று சொன்னார் கமல்ஹாசன்.

நேர்மையான வளர்ப்பு
நேர்மையை நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது அவர்களுக்கு குமட்டலாக உள்ளது. காமராஜர், அப்துல்கலாமை போன்று வர வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவன் நான் என்று சொன்னார் கமல்ஹாசன்.

பணம் கொடுப்பது யார்
நான் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்வதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். பாஜகவினர் எனக்கு பணம் கொடுப்பதாக சொல்கின்றனர் நான் போகும் இடங்களில் எல்லாம் பாஜகவை திட்டுகிறேன். அவர்கள் எப்படி எனக்கு பணம் கொடுப்பார்கள் என்று கேட்டார் கமல்.

இந்த தாடியா? அந்த தாடியா?
ஒரு இடத்திலாவது பாஜக ஜெயிக்காதா என்று நினைக்கின்றனர். நான் கோவையில் நான் பாஜகவை எதிர்த்துதான் போட்டியிடுகிறேன் என்றும் கமல் சொன்னார். "லேடியா, அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப்போல இந்த தாடியா, அந்த தாடியா என நான் கேட்கிறேன்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications