என்னை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கினாரா? அது தவறான தகவல்! துறையூர் கார்த்திக்குமார் மறுப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "எனது சாவுக்கு காரணம் துறையூர் எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர்தான்" என வீடியோ வெளியிட்ட கார்த்திக்குமார், தற்போது தன்னை ரவிசங்கர் அடிக்கவில்லை, தள்ளுமுள்ளுவால் அப்படி நடந்துவிட்டது என பிளேட்டையே திருப்பி போட்டு ரவிசங்கருடனே அமர்ந்து வீடியோ வெளியிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவர் துறையூர் எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கரை சந்தித்து தங்கள் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும் குப்பைகளை அள்ளுவதில்லை என்றும் புகார் அளித்தார்.

ravi shankar trichy

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்திக் குமாரை, ரவிசங்கர் கடுமையாக தாக்கி அவரை எட்டி உதைத்து அங்கிருந்து விரட்டியடித்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனங்கள்

இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாதக சாட்டை துரைமுருகன், திருச்சி சூர்யா சிவா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

காயமடைந்த நபர் மருத்துவமனையில் அட்மிட்

இந்த நிலையில் இந்த தாக்குதலில் காயமடைந்த கார்த்திக் குமார், மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கிருந்தபடியே அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: துறையூர் சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்த என் பகுதியில் 90 நாட்களாக தண்ணீர் வரவில்லை.

நகராட்சியில் புகார்

இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ரவிசங்கர் வீட்டருகே சென்று அவரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் என்னை அடித்து, அசிங்கப்படுத்திவிட்டார். எனது பைக்கையும் பிடுங்கிவிட்டார்.

விஜய்க்கு நம்பி வாக்களித்தோம்

விஜய்யை நம்பி வாக்களித்தோம். ஆனால் எங்களது நிலைமையை பாருங்கள். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை எம்எல்ஏவாக்கியதால்தான்இந்த நிலை. என் உயிருக்கு ஏதாவது ஒன்றால் ரவிசங்கரும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

பிளேட்டை மாற்றிய நபர்

இந்த நிலையில் கார்த்திக் குமார் திடீரென பிளேட்டை மாற்றி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரவிசங்கருடன் அமர்ந்துக் கொண்டு அவர் பேசுகையில், நான் ரவி அண்ணாவின் வீட்டிற்கு செல்வதற்காகத்தான் வந்திருந்தேன். நாங்கள் அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒரு குடும்பத்தைப் போல ஒன்றாக பயணித்து வருகிறோம்.

கூட்ட நெரிசலாம்

அப்போது கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாங்கள் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக இந்த சம்பவம் பரப்பப்படுகிறது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என கார்த்திக்குமார் தெரிவித்துள்ளார்.

தெளிவாக தெரியும் வீடியோ

கார்த்திக்குமார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அது போல் முதல் வீடியோவில் தன் சாவுக்கு காரணம் ரவிசங்கர்தான் காரணம் என்று சொல்லிவிட்டு, அதே ரவிசங்கருடன் அமர்ந்து வீடியோ போட்டு தாக்குதல் நடத்தவில்லை என பல்டி அடித்து பேசியுள்ளார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் மாற்றி பேசுகிறார்?

அந்த வீடியோவில் தாக்குதல் நடத்தியவர் ரவிசங்கர் என தெரியவில்லை என்றாலும் அது கிளியராக ஒரு தாக்குதல் சம்பவம் என தெரிகிறது. ஆனால் என்ன நிர்பந்தத்திற்காக கார்த்திக் குமார் இப்படி மாற்றி பேசுகிறார் என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+