திருச்சியில் ஸ்பாவில் மசாஜ் சென்டர்.. பெண்களை வைத்து பாலியல் தொழில்.. டிக்டாக் சூர்யா அதிரடி கைது
திருச்சி: திருச்சியில் ஸ்பா பெயரில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக டிக்டாக் பிரபலம் சூர்யாவை போலீஸார் கைது செய்தனர். அவருடன் புரோக்கராக செயல்பட்ட தினேஷும் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் சன் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் சூர்யா. இவர் டிக்டாக் மூலம் பிரபலமானவர்.
தனது நடிப்புத் திறமையை காட்டுவதற்காக டிக்டாக்கில் தலையை காட்டிய இவர் நாளடைவில் ஆபாசமாக நடிக்கவும் பேசவும் தொடங்கிவிட்டார். இதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

பாலியல் தொழில்
டிக்டாக்கில் வீடியோ போடுபவர்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாகவும் இவர் கடந்த காலங்களில் கண்ணீர் வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

10 பேர் கைது
இந்த நிலையில் இவரது மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் தொழில் செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் நடத்திய சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

சூர்யா கைது
இந்த நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே. நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் விபசாரத் தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சூர்யா உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீஸார் கைது செய்தனர்.

தொடர் விசாரணை
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாரிடம் பிடிபட்ட சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இந்த ஸ்பாவுக்கு தனக்கும் சம்பந்தமில்லை என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த ஸ்பா மசாஜ் சென்டருக்கு உரிமையாளரே சூர்யாதான் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு புரோக்கராக செயல்பட்ட தினேஷையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications