முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உடனே களமிறங்கிய அன்பில் மகேஷ்.. நெகிழ்ந்து போன இலங்கை தமிழர்கள்!
திருச்சி: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களே நேரில் வந்து குறைகளை கேட்டதால் இலங்கை தமிழர் அகதிகள் நெகிழ்ந்து போனார்கள்.
தமிழ்நாட்டில் திருச்சி, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கை அகதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிதி
இதனால் தங்களுக்கு உதவும்படி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் குரலை கேட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

ஆய்வு செய்தனர்
மேலும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அதிகள் முகாமில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்யும்படி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அடிப்படை வசதிகள் உள்ளதா?
திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டனர். அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.4,000 கொரோனா உதவி தொகையும் அங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.

குறைகளை கேட்டறிந்தனர்
இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் ஆகியோர் இலங்கை தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களே நேரில் வந்து குறைகளை கேட்டதால் இலங்கை தமிழர் அகதிகள் நெகிழ்ந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications