ஜபல்பூர் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த 5 பேர் பலி! அன்பில் மகேஷ் நேரில் ஆறுதல்
திருச்சி: மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆறுதல் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் காமராஜ் (39). இவர் கடந்த ஒரு ஆண்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 30-ஆம் தேதி காமராஜ், அவரது மனைவி கார்குழலி (38), மகன்கள் தமிழ்வேந்தன் (5), புவிந்திரன் (10) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த உறவினர் சௌபாக்கியம், அவரது இரண்டு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணை பகுதியில் சுற்றுலா சென்றனர்.
சுமார் 41 பேருடன் சென்ற அந்தப் படகு, எதிர்பாராத விதமாக அதிவேக காற்றால் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காமராஜின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காமராஜ்
கார்குழலி (மனைவி)
தமிழ்வேந்தன் (இளைய மகன்)
சௌபாக்கியம் (உறவினர்)
மயூரான் (உறவினரின் மகன்)
அதிர்ஷ்டவசமாக, காமராஜின் மூத்த மகன் புவிந்திரன் மற்றும் சௌபாக்கியத்தின் மகள் இனியா ஆகிய இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தங்கள் தொகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவல்பட்டில் உள்ள காமராஜின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்குள்ள உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications