கனமழை: திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Recommended Video
திருச்சி: கனமழையால் திருச்சி, அரியலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது மழை வெளுத்தது. பின்னர் ஆங்காங்கே பரவலாக மட்டும் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் சென்னை புறநகரில் வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய பெருமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
சென்னை தாம்பரத்தில் மட்டும் 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுகு 1 வாரம் கனமழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிக கனமழை கொட்டியது. இதனையடுத்து திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டஙகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாகை, வேதாரண்யம், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
3 பேர் பலி
இதனிடையே கடலூரில் கனமழையால் நள்ளிரவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியாகினர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications