சாருபாலா தொண்டைமான் ஈஸியா ஜெயிக்க வாய்ப்பு.. காரணம் திமுக, அதிமுக.. செம சுவாரஸ்யம்!

திருச்சி தொகுதியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருச்சியில் அமமுகவின் வேட்பாளருக்குத்தான் வாய்ப்பு.. காரணம் இவங்கதான்- வீடியோ

    திருச்சி: முக்கிய கட்சிகளிடையே முக்கோண போட்டி திருச்சி தொகுதியில் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது திருச்சி!

    இருக்கும் 40 தொகுதிகளில் எந்த தொகுதிக்கு போட்டி இருக்கோ இல்லையோ.. ஆனால் இந்த திருச்சி மீதுமட்டும் எல்லாருக்குமே ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது!

    திமுக தரப்பில் முதன்முதலில் இந்த தொகுதியை கேட்டது வைகோதான். அதற்காகவே அந்த தொகுதியில் 2 மாசம் தங்கி நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு முன்பே திருச்சி நமக்குதான் என்று நம்பி இருந்தவர் தயாநிதி மாறன்.

    குஷ்பு விருப்ப மனு

    குஷ்பு விருப்ப மனு

    எனினும், காங்கிரஸ் தரப்பில் டெல்லி லாபி மூலம் திருச்சியை கேட்டார் திருநாவுக்கரசர். அடடா.. திருநாவுக்கரசர் கேட்டுவிட்டாரே, நாம சும்மா இருப்பதா என குஷ்பு இந்த தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

    ராகுல் தலையீடு

    ராகுல் தலையீடு

    இதில் சம்பந்தமே இல்லாமல் திடீரென எல்லாரையும் தள்ளிவிட்டு புயலென உள்ளே நுழைந்தது சபரீசன் பெயர்! ஆனால் கடைசியில் காங்கிரசுக்குதான் திருச்சி என்று ஆனது! இதுகூட ராகுல் தலையிட்டதால்தான்! அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருவதற்குள் ஆதரவாளர்களே அதை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

    விஜயகுமார்

    விஜயகுமார்

    அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு திருச்சிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக விஜயகுமார் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு தேமுதிக செல்வாக்கு அதிக அளவு இல்லை என்றாலும், ஓரளவு இருக்கிறது. மேலும் இந்த தொகுதியில் உள்ள வாண்டையர் சமூகத்தார் கிட்டத்தட்ட நாயக்கர் சமூகத்தில் இணைந்து வருபவர்கள் போல தெரிகிறது.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    அதனால் தேமுதிகவுக்கு ஓரளவு பலம்தான். இதைதவிர தேமுதிக நிர்வாகிகளும் திருச்சி தொகுதியில் சமீப காலமாக களப்பணியில் ஈடுபட்டு மக்கள் கவனத்தை தங்கள் வசம் திருப்பி உள்ளனர். எனவேதான் தேமுதிகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சாருபாலா

    சாருபாலா

    மற்றொரு பக்கம் அமமுக சாருபாலா தொண்டைமானை நிறுத்தி உள்ளது. இவர் செல்வாக்கு மிக்க நபர். இவரது மூதாதையர்கள் புதுக்கோட்டையில் மன்னராக இருந்ததாலும், இப்போதும் சாருபாலாவுக்கு திருச்சியில் நல்ல மதிப்பு இப்போதும் உள்ளது. மேயராக இருந்தவர். வாண்டையர் சமூகத்தின் ஓட்டுக்கள் கணிசமாக இவருக்கு விழ வாய்ப்புள்ளது. இவர் காங்கிரசில் அன்று இருந்தது முதல் இப்போது வரை தொகுதியை அலசி ஆராய்ந்தவர்.

    வெற்றி வாய்ப்பு

    வெற்றி வாய்ப்பு

    ஆக ... திருச்சியில் அமமுக, காங்கிரஸ், தேமுதிக என முக்கோண போட்டி மட்டுமல்ல, முக்கிய நபர்களிடையே போட்டியும் எழுந்துள்ளது. ஆனால் இந்த தொகுதியை பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது பிரச்சார யுக்தி மட்டும்தான். இதை யார் சரியாக கையாள்கிறார்களோ, அவர்கள் கையில்தான் சென்றடைய போகிறது திருச்சி! யார் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் திருச்சி.. தற்போதைய நிலையில் வேட்பாளர் அடிப்படையில் சாருபாலா தொண்டைமான் முன்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+