அதகள திருச்சி.. கடும் மோதல்.. முக்கிய தலைகள் 'லீடிங்' - மாலை முரசு சர்வே
திருச்சி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருச்சியில் திமுக, அதிமுக இடையே கடும் மோதல் நிலவுவது மாலைமுரசு கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில், வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், மாலை முரசு செய்தி நிறுவனம் இன்று திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

கடும் போட்டி
அதில், திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் அதிமுக கூட்டணி 41% பெற்று முதலிடம் பெறுகிறது. திமுக கூட்டணி 40% பெற்று இரண்டாமிடம் பெறுகிறது. வெறும் 1 சதவிகித வாக்கு வித்தியாசம் தான். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 7% பெற்று மூன்றாமிடம் பெறுகிறது. அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி 3 சதவிகிதம் பெற்று கடைசி இடம் பெற்றுள்ளன. இங்கு அதிமுக சார்பில் இந்திராகாந்தியும், திமுக சார்பில் ஸ்டாலின் குமாரும் போட்டியிடுகின்றனர்.

2 சதவிகித வித்தியாசம்
அதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் திமுக கூட்டணி 42% பெற்று முதலிடம் பெறுகிறது. அதிமுக கூட்டணி 40% பெற்று இரண்டாமிடம். அமமுக 7% பெற்று மூன்றாமிடம். நாம் தமிழர் கட்சி 4% நான்காமிடம். முசிறி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 2% பெற்று கடைசி இடம் பெறுகிறது.

மேட்ச் டிரா
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி தலா 43% பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணச்சநல்லூர் தொகுதியில் அமமுக மற்றும் நாம் தமிழர் 5 சதவிகித வாக்குகள். மக்கள் நீதி மய்யம் 1% பெற்று கடைசி இடம் பெறுகிறது.

பெரும்பான்மை
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக கூட்டணி 49% பெற்று முதலிடம் பெறுகிறது. லால்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி 37% பெற்று இரண்டாமிடம். நாம் தமிழர் கட்சி 6% மூன்றாமிடம். மக்கள் நீதி மய்யம் 4% பெற்று நான்காமிடம். லால்குடி தொகுதியில் அமமுக 2% பெற்று கடைசி இடம் பெறுகிறது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திமுக கூட்டணி 44% பெற்று முதலிடம் பெறுகிறது. திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி 39% பெற்று இரண்டாமிடம். நாம் தமிழர் கட்சி 6% பெற்று மூன்றாமிடம். திருவெறும்பூரில் அமமுக 5% பெற்று நான்காமிடம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 4% பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு திமுக சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மேற்கு
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக கூட்டணி 49% பெற்று முதலிடம் பெறுகிறது. திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி 35% பெற்று இரண்டாமிடம். மக்கள் நீதி மய்யம் 6% பெற்று மூன்றாமிடம். நாம் தமிழர் கட்சி 5% பெற்று நான்காமிடம். திருச்சி மேற்கு தொகுதியில் அமமுக 4% பெறும் என்று கருத்துக்கணிப்பு. இங்கு திமுக சார்பில் கே.என்.நேரு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு சதவிகித வித்தியாசம்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக கூட்டணி 39% பெற்று முதலிடம் பெறுகிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி 38% பெற்று இரண்டாமிடம் பெறுகிறது. வெறும் 1 சதவிகித வாக்கு வித்தியாசம் தான். அமமுக 11% பெற்று மூன்றாம் இடம். ஸ்ரீரங்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலா 6% பெறுகிறது.

கடும் சவால்
திருச்சி குளித்தலை தொகுதியில் திமுக கூட்டணி 43% பெற்று முதலிடம் பெறுகிறது. குளித்தலை தொகுதியில் அதிமுக கூட்டணி 41% பெற்று இரண்டாமிடம். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் 5% பெற்று மூன்றாம் இடம். அமமுக 4% வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications