Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா உணவகத்தில் இலவச உணவு.. முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் அளித்த திருச்சி அதிமுக

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர பகுதியில் இன்று முதல் மே 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசமாக வழங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.2 லட்சத்தை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் ப.குமார் இன்று வழங்கினார்.

திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஏற்பாட்டில் மாநகர பகுதியில் இன்று முதல் மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம் வழங்கப்படுகிறது.

 Trichy ADMK gives 2 lakhs for supplying free food

அதற்கான தொகையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் மாநகர மாவட்ட செயலாளர் ப.குமார் இன்று வழங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்படி திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஏற்பாட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மே 3ம் தேதி வரையில்.. மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

 Trichy ADMK gives 2 lakhs for supplying free food

அதற்காக முதற்கட்டமாக ரூ 2 லட்சத்தை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் இன்று வழங்கினார். உடன் பகுதி கழக செயலாளர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன் எஸ்.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், எம்.ஆர்.ஆர் .முஸ்தபா, என்.எஸ்.பூபதி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

 Trichy ADMK gives 2 lakhs for supplying free food

திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில் உள்ள புத்தூர், தென்னூர் உழவர் சந்தை, உறையூர் சாலை ரோடு, திருச்சி ஜங்சன் ராக்கின்ஸ் சாலை, கல்கண்டார்கோட்டை,
அரியமங்கலம் ஜெகநாதபுரம் ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-ஆம் தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

 Trichy ADMK gives 2 lakhs for supplying free food

அதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இன்று காலை பொன்மலை பகுதி கழகத்திற்கு உட்பட கணேசநகர் தெருக்களில்
தொடர்ந்து 5வது நாளாக இல்லம் தோறும் விலையில்லா காய்கறி தொகுப்புகளை திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தொகுப்பு பொருட்களை வழங்கினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+