டீச்சர் பலமுறை எச்சரித்தும்.. பின்னாடியே சுற்றி வந்த வணக்கம் சோமு.. கடத்தல் வரை போய் மானம் போன கதை!

வணக்கம் சோமுவை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டீச்சரை கடத்தினாரா அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் சோமு?-வீடியோ

    திருச்சி: டீச்சர் பலமுறை எச்சரித்தும், அவர் பின்னாடியே சுற்றி சுற்றி வந்துள்ளார் வணக்கம் சோமு. அதனால்தான் கடத்தல் வரை சென்றுள்ளார். ஆனால், இந்த விஷயம் தேவையில்லாமல் ஊதி பெரிதாக்குவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

    வணக்கம் சோமு - இவர் திருச்சி பிரமுகர். மறைந்த ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பின் காரணமாக 2009-ல் அதிமுகவில் இணைந்தார். கடுமையாக பணியாற்றினார். இவரது செயல்பாடுகளை கண்டு வியந்த தலைமை, திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் அன்று கொடுத்தது.

    அப்போதுதான் திருச்சி மாவட்டத்தில் பிரபலம் ஆனார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர். திருச்சி மலைக்கோட்டை பகுதி மாவட்ட செயலாளரும், அமராவதி கூட்டுறவு சங்க இயக்குநருமாக உள்ளார்.

     ஒரு தலைகாதல்

    ஒரு தலைகாதல்

    இவர் திடீரென ஒரு டீச்சரை கடத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது. வணக்கம் சோமுவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி காலேஜ் படிக்கிற வயசில் ஒரு பெண் இருக்கும்போது, டீச்சரையே ஒரு தலைகாதலால் சுற்றி சுற்றி வந்ததாக தெரிகிறது. டீச்சர் இதற்கு பிடி கொடுக்காமல் போகவும்தான், கடத்தல் வரை சென்றுள்ளார். ஆனால், இந்த கடத்தல் விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்துவதாக ஒருசாரார் கூறுகிறார்கள்.

     போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    மாவட்டத்தில் எப்பவுமே தன்னை தானே ஃபேமஸாக வைத்து கொள்வாராம் வணக்கம் சோமு. தொகுதி மக்கள் பார்வை தன் மீது விழும்படியே பார்த்து கொள்வார். திடீரென விளம்பர போஸ்டர்களை ஆதரவாளர்களை வைத்து இவரே ஒட்டுவாராம். இதனாலேயே திருச்சி அதிமுக வட்டாரத்தில் இவர் பெயர் அடிக்கடி முணுமுணுக்கப்பட்டது.

     ஆதரவாளர்

    ஆதரவாளர்

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, வணக்கம் சோமு, திருச்சி நகர அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமாரின் ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது. இங்குதான் விஷயம் இடிக்கிறது. ப.குமாரின் ஆதரவாளர் என்பதாலேயே டீச்சரை கடத்திய விவகாரம் பெரிதாக்குவதாக சொல்லப்படுகிறது.

     கோஷ்டி அரசியல்

    கோஷ்டி அரசியல்

    ஏற்கனவே திருச்சியில் கோஷ்டி அரசியல் நிறைய இருப்பதால், டீச்சர் விவகாரத்தை வைத்து காய் நகர்த்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இதெல்லாம் உண்மைதானா, என்பதை விசாரிக்க வணக்கம் சோமுவையும் காணவில்லை. அதனால் அவர் போலீசில் சிக்கினால்தான் இது பற்றிய உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் ஆளும் தரப்புக்கு இதனால் தர்மசங்கட நிலைதான் ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+