டீச்சர் கதற கதற.. ஆம்புலன்ஸில் இழுத்து போட்டார்கள்.. பறந்து விட்டனர்.. வணக்கம் சோமு கும்பல் அராஜகம்
வணக்கம் சோமுவை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
திருச்சி: "அந்த பொண்ணை டக்கென உள்ளே இழுத்து ஆம்புலன்சில் போட்டார்கள்.. டீச்சர் கத்தக் கத்த 5 பேர் கொண்ட கும்பல் ஆம்புலன்சில் தூக்கி போட்டுக் கொண்டு பறந்துவிட்டனர்" என்ற சில டிரைவர்களின் வாக்குமூலத்தை வைத்து, டீச்சரை கடத்திய வட்ட செயலாளர் வணக்கம் சோமுவை போலீசார் 2-வது நாளாக தேடி வருகிறார்கள்.
வணக்கம் சோமு - இவர் திருச்சி அதிமுக பிரமுகர். இவரது செயல்பாடுகளை கண்டு வியந்த தலைமை, திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் அன்று கொடுத்தது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர். இப்போது ஒரு டீச்சரை இவர் கடத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஆண்டாள் வீதி பகுதியில் மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்சில் காத்திருந்த நபர்கள் பேராசிரியர் மகாலட்சுமியை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மகாலட்சுமி
ஆம்புலன்ஸ் சென்றபோது, மகாலட்சுமி அலறி சத்தம் போடவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, துவரங்குறிச்சி என்ற இடத்தில், அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் கடத்தல்காரர்கள் இறக்கி விட்டு பறந்துள்ளனர். இதன்பின்னர், அங்கிருந்தபடியே மகாலட்சுமி போலீசுக்கு புகார் சொல்லவும்தான் விரைந்து சென்று மகாலட்சுமியை மீட்டு, விசாரணையில் இறங்கினர். அப்போது, இந்த கடத்தல் ஒருதலை காதல் சம்பந்ததப்பட்டது என்று தெரியவந்தது.

வணக்கம் சோமு
வட்ட செயலாளர் வணக்கம் சோமுவுக்கு டீச்சர் மீது ஒரு தலைக்காதல் இருந்துள்ளது. அவர், எங்கெங்கு போகிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே சென்று வணக்கம் சோமு தகராறு செய்துள்ளார். கல்யாணம் ஆகி, காலேஜில் படிக்கும் அளவுக்கு ஒரு மகள் உட்பட 2 பிள்ளைகள் சோமுவுக்கு இருக்கிறார்கள். இருந்தும் டீச்சரை விரட்டி விரட்டி காதலித்துள்ளார். அதற்கு டீச்சர் பிடி கொடுக்காமல் போகவும்தான், இப்படி கடத்தல் வரை இறங்கி உள்ளது தெரியவந்தது. இதை பற்றி விசாரிப்பதற்குள் வணக்கம் சோமு தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவு
இந்த துணிகர சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீஸார் 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள வணக்கம் சோமு உள்ளிட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த சில ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்துக் கூறியதாவது:

மடக்கிய கும்பல்
"இந்த இடத்தில்தான் தான் அந்தப் பெண்ணைக் கடத்தினார்கள். ஒரு ஆம்புலன்ஸ் வேன் நின்று கொண்டிருந்தது. சரி யாருக்கோ உடம்பு சரியில்லை போல. அதனால் கூட்டிக் கொண்டு போக நிற்பதாக நாங்கள் நினைத்தோம். அப்போது அந்தப் பெண் வந்து கொண்டிரு்நதார். ஆம்புலன்ஸ் அருகே வந்ததும் டக்கென உள்ளே இருந்து இறங்கிய கும்பல் அவரை மடக்கி உள்ளே இழுத்துப் போட்டது.

2-வது நாள்
மொத்தம் டிரைவரையும் சேர்த்து 5 பேரு இருந்தானுங்க. அந்தப் பெண் கத்தக் கத்த உள்ளே தூக்கி போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் கிளம்பி விட்டனர். வேன் படு வேகமாக போனது. நல்ல ஸ்பீடு.. அந்த வேகத்துக்கு யாராவது குறுக்கே வந்திருந்தால் அடித்துத் தூக்கியிருப்பார்கள். அந்த அளவுக்கு வேகம்" என்றனர். இந்த தகவல்களை கொண்டும், டீச்சர் அளித்த புகாரை கொண்டும் போலீசார் வட்ட செயலாளர் வணக்கம் சோமுவை வட்டமடித்து தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications