எஞ்சினில் கோளாறு.. தெரியாமல் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸால் பரபரப்பு!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
Recommended Video

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் சமீப காலமாக சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது இடித்தது.
அதற்கு மறுநாள் ஜெட்ஏர்வேஸ் விமானம் ஏசி கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

என்ன பாதிப்பு
இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை உருவாகி உள்ளது. ஒரு என்ஜின் மட்டும் வேலை செய்யாமல் போய் இருக்கிறது.

கடைசியில் கண்டுபிடித்தார்
ஆனால் இதை விமானி விமானம் எடுக்கப்படும் வரை கண்டுபிடிக்கவில்லை. கடைசி நேரத்தில் விமானம் புறப்பட்ட பின்தான் கண்டுபிடித்துள்ளார். அந்த விமானத்தில் 118 பயணிகள் இருந்துள்ளனர். ஆனால் விமானம் புறப்பட்ட பின்தான் அதில் இருந்து பிரச்சனையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவசரமாக தரையிறக்கினார்
இந்த நிலையில் விமானத்தில் இருந்த பிரச்சனை தெரிந்தவுடன் வேகவேகமாக விமானி செயல்பட்டார். அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

எல்லோரும் தப்பினர்
இந்த கோளாறு காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேறு விமானம் மூலம் பயணிகள் துபாய்க்கு அனுப்பப்பட்டனர். ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. இதுகுறித்து அந்த விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
{document1}
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications