திருச்சி அரபிக் கல்லூரியில் முப்பெரும் விழா! பட்டங்கள் வழங்கப்பட்டன
திருச்சி: திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரியில் 13 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா உள்பட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அஷ்ஷைகு யாஸீன் அலி மவுலானா நாயகம் பட்டங்களை வழங்கினார்.

திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரியின் 13வது யாஸீனிய் பட்டமளிப்பு விழா, முதலாம் ஆண்டு புகாரி ஷரீஃப் ஸனது வழங்கும் விழா, மற்றும் புகாரி ஷரீஃப் அபூர்வ பிரார்த்தனை விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த விழா, நபி (ஸல்) அவர்களின் 36வது தலைமுறை திருப்பேரர் அஷ்ஷைகு ஜமாலிய்யா சையது யாஸீன் அலி மவுலானா அல் ஹஸனி ஹூசைனிய்யுல் நாயகம் தலைமையில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்றது. விழாவில் மதரஸா பேராசிரியர்கள் சயீது முஹம்மது, அப்துல் ரஹ்மான், முஹம்மது ரபீஉத்தீன், ஷப்பீர் அலி, நூரே முஹம்மதிய்யா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹனபி கலீஃபா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
S.I. தவ்லத், அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை செயலர், வரவேற்புரை ஆற்றினார். மூத்த உறுப்பினர் முஹம்மது முஸ்தஃபா, நபி புகழ் பாடினார். ஆலிம் டாக்டர் எம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி,ஆலிம் ஏ. கே. ஏ. ஷர்புத்தீன் ஃபைஜி, எம். ஜே. முஹம்மது இக்பால், கே. கே. முஹம்மது முஹய்யத்தீன் ஆலிம் ஆமிரி ஆகியோர் பேசினர்.
அஷ்ஷைகு யாஸீன் அலி மவுலானா நாயகம் அவர்கள் யாஸீனிய் மற்றும் புகாரி பட்டங்களை பட்டதாரிகளுக்கு வழங்கியபோது, "அறிவு என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. 'ஆலிம்', 'உலமா' என்பவர்கள் இறைவனை உணர்ந்த அறிஞர்கள்.
நபிமார்கள் உலமாக்கள் வாரிசுகள் என கூறப்படுவது உண்மையான அறிவுடன் கூடியது. உண்மையான அறிவு என்பது இறைவனை அறிதலாகும். அதற்கு தூய நெறியறிவு அவசியம்," எனவும் , உண்மையான ஞானத்தில் இணைவைத்தலும் இல்லை, பிரிவும் இல்லை என ௯றி அணைவரும் ஒற்றுமையுடன், ஒழுங்குகளுடன் நபிகள் நாயகம் குடும்பத்தவர்கள் ௯றிய வகையில் குர்ஆன், நபிகள் வாழ்வு முறை அறிந்து வாழ வேண்டும், சமயங்களிடையே நல்லிணக்கமும், அனைத்து மக்களிடமும் சமாதானமும் வேண்டுமென பேசினார்.
அரபிக் கல்லூரியில் 7 வருடம் பயின்று ஆலிம் பட்டம் பெறுபவர்கள், அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களில் பொறியியல், வணிகம், வரலாறு உள்ளிட்ட துறைகளிலும் பட்டதாரிகளாக மிளிர்வது இந்த கல்லூரியின் குறிப்பிடத்தக்க விஷயம் என்றார்கள். மொத்தம் 28 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் மதிய உணவு உபசரிக்கப்பட்டது.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications