திருச்சி காவிரி ஆற்றில் துண்டு துண்டாக உடைந்த தெர்மாகோல்.. குபீர்னு வந்த உருவம்.. 2 மாணவர்கள் எங்கே?
திருச்சி: திருச்சி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பேரின் கதி என்ன என்றே தெரியவில்லை.. 2வது நாளாக தேடுதல் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால், காவிரி ஆற்று படித்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
திருச்சி கண்டோன்மென்ட் அரசு உதவி பெறும் தனியார் (ஆர்சி) மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில், நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். அரையாண்டு இறுதித் தேர்வு நேற்று முடிந்ததால், மதியம் ஒரு மணிக்கு காவிரி ஆற்றில் குளிக்க போனார்கள்.

அப்போது ஜாகிர் உசேன், விக்னேஷ் மற்றும் சிம்பு ஆகிய 3 மாணவர்கள், தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் பரப்பி வைத்துக் கொண்டு, அதனை பிடித்தவாறு நீச்சல் அடித்துள்ளனர்.. ஆனால், இவர்களது எடை தாங்காமல், தெர்மாகோல் அட்டை துண்டு துண்டாக உடைந்துவிட்டது.
பிடிமானம்: இதனால் பிடிமானத்தை இழந்த 3 மாணவர்களும் நீரில் மூழ்கி தத்தளிக்க துவங்கினார்கள்.. இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி கூச்சலிட்டார்கள்.. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், வெள்ள நீரின் வேகத்தில், 3 பேருமே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்... இதையடுத்து, மாவட்ட அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், இந்த ஆற்றில் முதலைகள் இருக்கிறதாம்.. தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடியபோது, முதலைகள் ஆற்றுக்குள் தென்பட்டிருக்கின்றன.. இதனால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..
தேடும் பணியில் சிக்கல்: இரவு நேரத்தில் இந்த பணியை மேற்கொள்ள முடியாமல், இன்று காலையில் மறுபடியும் தேடுதல் பணியை தொடர்ந்திருக்கிறார்கள்.. அப்போது ஜாகிர் உசேன் என்ற மாணவனின் சடலம் மட்டும் கிடைத்திருக்கிறது.. மற்ற 2 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால்தான் நீச்சல் அடிக்கலாம் என்று மாணவர்கள் அனைவருக்குமே ஆசை வந்துள்ளது.. அதனால், ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், ஆற்றின் மையப் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால், எதிர்நீச்சல் போட முடியாமல் தவித்தனர்..
7 மாணவர்கள்: இதனால், நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தத்தளித்து கொண்டே கரைக்கு வந்துவிட்டார்கள்.. மற்ற 3 மாணவர்கள் மட்டும் வெள்ள நீரில் சிக்கி கொண்டார்கள். மீட்பு படையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வருவதற்குள், பிடிமானம் இல்லாமல் நீரில் மூழ்க துவங்கினர்.
மாணவர்களை மீட்பதற்காக முதலில், ரப்பர் டியூப் உதவியுடன் காவிரியின் மையப்பகுதிக்கு சென்று கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் தேடி பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் ஒரு பெரிய முதலை ஆற்றில் நீந்தி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. பிறகு அந்த முதலை புதருக்குள் செல்லும்வரை காத்திருந்துவிட்டு, மறுபடியும் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், முதலைகள் நடமாட்டம், இரவு வெகு நேரமாகிவிட்டதால்தான், தேடும் பணி நிறுத்தப்பட்டது..
முதலைகள்: இன்று காலை முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பிறகே தேடும் பணி மறுபடியும் தொடங்கப்பட்டது. மொத்தம் 50 பேர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. ரப்பர் படகு, பரிசல், ஸ்கூபா போன்ற உபகரணங்களுடன் இறங்கி உள்ளனர்.. அந்த 2 மாணவர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை.. இதனால் காவிரி ஆற்றுப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications