அதிகாலையில் கோர விபத்து.. ஆம்னி கார் மோதி 4 பேர் பலி.. திருமணம் முடித்து சென்னை திரும்பியபோது சோகம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் சுப நிகழ்ச்சிகள் நடந்தன. அப்படி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய தம்பதிக்கு தான் மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது.

accident Tamil nadu

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுகுளத்தூரில் சகோதரரின் திருமணத்தை முடித்துவிட்டு காரில் சென்னை திரும்பியபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் காரில் பயணம் செய்த காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜசீலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+