"சாதி".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமுக ஆர்ப்பாட்டம்

காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து திருச்சி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பெண்களை இழிவாக பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சியின் வடக்கு மாவட்ட திமுகவின் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்.. இவர் சமீபத்தில் ஒரு ஆடியோவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதில், அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்தும் காவல்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது.

 Trichy DMK Protest against Kaduvetti Thiyagarajan

இந்த ஆடியோ பெரும் சர்ச்சையையும் கிளப்பிய நிலையில், பலரும் அந்த தியாகராஜன் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த ஆடியோவில் பேசியது தான் அல்ல என்று காடுவெட்டி தியாகராஜன் விளக்கம் தந்திருந்த நிலையிலும், அவர் மீதான கண்டனங்கள் பெருகியபடியே உள்ளன.

இது சம்பந்தமாக அவர் மீது போலீசில் புகாரும் தரப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் சாதி சண்டையை ஏற்படுத்துவதில் திமுகதான் பெரும் பங்கு வகிக்கிறது என்ற கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் பதிவாகியபடி வருகின்றன.

இந்நிலையில், தியாகராஜனை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிவுறுத்தலின்படி இந்த போராட்டம் நடந்தது.. தாயாகவும் சகோதரியாகவும் மதிக்க வேண்டிய பெண்களை இழிவாகவும், காவல்துறையை தரக்குறைவாகவும் பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.

Trichy DMK Protest against Kaduvetti Thiyagarajan

இந்த ஆர்பாட்டத்திற்கு அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.அழகேசன், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு அ.நடராஜ், சிறுகமணி நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.. அதேபோல் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையிலும், திருவானைக்கோவில் பகுதி செயலாளர் டைமன் ஜக.திருப்பதி தலைமையிலும் இன்று காலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் காந்தி திருவுருவ சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீரங்கம் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழகத்தினர், பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை திராக மிக கடுமையாக தெரிவித்தனர். அதேபோல் வடக்கு மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+