போலீஸை நோக்கி பாய்ந்த கத்தி.. தூப்பாக்கியில் இருந்து சீறிய தோட்டா! திருச்சி சிவநேசனுக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தீபாவளி அன்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவனேசன் என்பவர் கரியமாணிக்கம் பிரிவு சாலை அருகே கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காட்டுவதற்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது மோகன் என்கிற காவலரை சிவனேசன் தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். உடனடியாக போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிவனேசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரத்தைச் சேர்ந்த வீர ராகுல் என்பவரும், அவரது உறவினரான விஷால் என்பவரும் கடந்த 9ஆம் தேதி சமயபுரம் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்தனர். தனலட்சுமி மருத்துவமனை அருகே சென்றபோது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் அவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்தது.

Trichy Murder Police Encounter

இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட எஸ் பி எம் கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மூன்று தனிப்படைகளைச் சேர்ந்த போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று, இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கிருபா என்ற கிருபாகரன், ஹரிகரன், கெனி, ரெனி, சரவணன் மற்றும் சிவநேசன் ஆகிய ஆறு பேரையும் பிடித்தனர்.

பின்னர், அவர்களை விசாரணைக்காக சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையின்போது, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக சிவநேசன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக சமயபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சிவநேசனை அழைத்துக்கொண்டு கரியமாணிக்கம் பிரிவு சாலை அருகே சென்றனர்.

அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சிவநேசன், காவலர் மோகனைத் தாக்கியதுடன், போலீசார் வந்த வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சிவநேசன் வலது கால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்ததைத் தொடர்ந்து அவரைப் போலீசார் பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிவனேசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+