திருச்சி கிழக்கு தொகுதியில் டஃப் ஃபைட்.. மீண்டும் தலைகாட்டும் விஜய்.. நாளைய பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், வேட்பு மனு தாக்கல் செய்த அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அதன் பிறகு தொகுதிப் பக்கமே வராத விஜய் நாளை தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

Tiruchirappalli east candidates

திருச்சி கிழக்கில் விஜய்

கடந்த 2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய், அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரசாரம் செய்தார். அதன்பிறகு விஜய் மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு. அங்கு போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கினார்.

திருச்சி கிழக்கில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி, போட்டு கொண்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடம் ஏற்பட்டது.

தவெகவினர் வாக்கு சேகரிப்பு

தவெக நிர்வாகிகளும், தொண்டா்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து, கிழக்கு தொகுதிக்கு உபட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, தவெக தலைவர் விஜய் வெற்றி பெற விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்ட பல்வேறு இடங்களிலும் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய வருவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறப்ட்டது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சியில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் விஜய் பிளான்

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் விஜய், விமான நிலையம் வயர்லெஸ் ரோடு, டி.வி.எஸ்.டோல்கேட், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று, சிந்தாமணி அண்ணாசிலை, சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, மரக்கடை, பாலக்கரை வழியாக சாலை வலம் செல்ல திட்டமிட்டு உள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரசாரத்திற்கு 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி நாளை பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரை விஜய் பிரசாரத்திற்கு திருச்சி போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2 மணியளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மேலும், விமான நிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை ரோடு ஷோ வருகிறார்.

டஃப் ஃபைட்

திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தவரின் வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்று விஜய் கருதுவதாகத் தெரிகிறது. இந்த தொகுதியில் தவெகவுக்கு 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனராம். இதை கருத்தில் கொண்டே இந்த தொகுதியை மலை போல நம்பி இறங்கி இருக்கிறாராம் விஜய்.

எனினும், வரக்கூடிய கருத்துக்கணிப்புகள் திருச்சி கிழக்கில் விஜய்க்கு சாதகமான நிலவரத்தைச் சொல்லவில்லை. இதனால் தவெக தரப்பு ஷாக் ஆகியிருக்கிறதாம். திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்கான இன்னொரு விசிட்டுக்கு விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

திருச்சி கிழக்கு - தொகுதி நிலவரம்

திருச்சி கிழக்கு தொகுதியில் 1,04,883 ஆண் வாக்காளர்கள், 1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17, 397 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி 1 என அழைக்கப்பட்டு வந்த திருச்சி கிழக்கு தொகுதி, கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. 1984, 1989 ஆம் ஆண்டுகளில் மலர்மன்னன், 1996, 2001 சட்டசபை தேர்தல்களில் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

கடந்த 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றார்.

திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் சி. ஜோசப் விஜய், திமுக சாா்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+