திருச்சியே திணறி போச்சு.. பயிர்க் கடன் தள்ளுபடி என்னாச்சு? விவசாயிகள் போராட்டத்தில் திடீர் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்தபடி முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கடந்த 5 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 22ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

Trichy Farmers Protest

தற்போது 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதூ. இந்நிலையில், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சர்வீஸ் ரோடு அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தனியார் நிலத்தில் போராட்டம் துவங்கப்பட்டது. முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். அடுத்த நாள் 50க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த 500 விவசாயிகள் தனியார் நிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் நாளில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டமும், நான்காவது நாள் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ரமேஷ், வினோத் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்தால்தான் போராட்டத்தை கை விடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். தற்போது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் அக்டோபர் 22ஆம் தேதிக்குள் அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் அதே சமயபுரம் பகுதியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், போராட்டத்திற்கு காவல்துறை தொல்லை கொடுத்தால் நீதிமன்றத்தை நட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+