சின்ன வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. குஷியில் இல்லத்தரசிகள்.. கவலையில் திருச்சி விவசாயிகள்
திருச்சி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 10 ரூபாயாகக் குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை குறைவினால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருச்சியில் சின்ன வெங்காயத்தின் தற்போதைய விலை ரூ.45 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காலை உணவில் தொடங்கி சாம்பார், பிரியாணி, குழம்பு வகைகள் என தவிர்க்க முடியாத காய்கறியாக வெங்காயம் உள்ளது. வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. எனவே அடித்தட்டு மக்களுக்கு வெங்காயம் என்பது அத்தியாவசியமான பொருளாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படும். அதை தவிர்த்து ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150ஐ கடந்தது. அதேபோல் டிசம்பர் மாதம் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 என்ற அளவில் இருந்தது.
பெரும்பாலானோர் பயன்படுத்தும் வெங்காயத்தின் மீதான விமர்சனங்கள் வருடம் தோறும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கம்தான். கடந்த ஓராண்டு காலமாகவே சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல்தான் விற்பனையானது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்தது.
சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை அதன் விலை எப்போதுமே சீராக இருக்காது. வரத்து பொறுத்து விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து விலை சட்டென குறையும். தற்போதும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாய் ஆக குறைந்துள்ளது.
திருச்சி வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம் 500 மூடை வரத்து வந்துள்ளது. பெரிய வெங்காயம் 500 மூடை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் வெங்காயம் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சின்ன வெங்காயம் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் சின்ன வெங்காயத்தின் விளைசல் சீராகி விலை குறையும் என தெரிவித்து இருந்தது. தற்போது வானிலை சற்று சீரடைந்துள்ள நிலையில் சின்ன வெங்காயத்தின் சிலை படிப்படியாக குறைந்து வருகிறது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தை என்பது மொத்த வியாபார பகுதியாகும். அங்கிருந்து தான் பிற பகுதிகளுக்கு சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். . கோயம்பேட்டில் விலை குறைவாக இருந்தாலும் சில்லறை கடைகளில் சற்று அதிகரித்து தான் இருக்கும்.
சென்னையில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி சந்தைகளில் ரூ 60 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் வரத்தும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications