Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியே துள்ளுதே.. சமயபுரத்துக்கு நற்செய்தி.. நாலாபக்கமும் மொத்தமா மாறுதே.. வாவ் "டபுள் டக்கர்"

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாநகரத்துக்கு அடுத்தடுத்த ஸ்வீட் அறிவிப்புகள் வெளியாகி கொண்டேயிருக்கின்றன.. சாலை விரிவாக்க பணிகள் குறித்து, தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது.

2 நாட்களுக்கு முன்புதான் திருச்சிக்கு குட்நியூஸ் ஒன்று வந்திருந்தது.. அதாவது, திருச்சி, நெல்லை, சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையானது, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது.

Trichy Good News and Double Decker Transport in Trichy Samayapuram Soon, say sources

மெட்ரோ நிர்வாகம்: இதில் திருச்சி மெட்ரோ வழிச்சாலை குறித்தும், அந்த மெட்ரோ அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்தும் விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகமும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதில், திருச்சி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கிமீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிமீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என்று மொத்தம் வழித்தடங்களில் 2 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

டபுள் டக்கர் பாலம்: இந்த அறிவிப்பானது, திருச்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வரும்நிலையில், இன்னொரு அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி, திருச்சியில் மெட்ரோ ரயில் மற்றும் மேம்பாலத்திற்காக டபுள் டக்கர் பாலம் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, திருச்சியில் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு டபுள் டக்கர் பாலம் அமைக்கப்பட போவதாக கூறப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக, சமயபுரம் முதல் வயலூர் வரையிலும், கிட்டத்தட்ட 19 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த டபுள் டக்கர் பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படுகிறதாம்.

சபாஷ் பணிகள்: ஏற்கனவே, திருச்சியில் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரிவடைந்து வருகின்றன.. இதைத்தவிர, சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகளும் மும்முரமாகி கொண்டிருக்கின்றன.. சமீபத்தில், மெட்ரோ பணிகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகிய நிலையில், இப்போது, டபுள் டக்கர் பாலம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. ஆக மொத்தம், நாலாபுறமும் நடந்து வரும் அதிரடி மாற்றங்களால், திருச்சியே திக்குமுக்காடி போயுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+