வாய் பேச முடியாத கணவனின் காலை மனைவி பிடிக்க.. கள்ளக்காதலன் கழுத்தை பிடிக்க! திகைத்து நின்ற திருச்சி
திருச்சி: கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. அதிலும் கணவன்மார்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.. உத்தரபிரதேசத்தில் தாலி கட்டிய கணவனை உயிரோடு மண்ணில் தோண்டி புதைத்துவிட்டார்.. இதை பார்த்த ஒரு கணவர், தன்னுடைய உசுரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, கள்ளக்காதலில் இறங்கிய தன்னுடைய மனைவியை, அந்த கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்ட நிகழ்வும் நம்முடைய நாட்டில் அரங்கேறியது. நம்முடைய திருச்சியிலும் ஒரு கொடுமை நடந்தது.. அதற்கான உரிய தண்டனையையும் நீதிமன்றம் தற்போது தந்துள்ளது.
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக்தாவூது.. இவருக்கு 40 வயதாகிறது.. தையல்காரராக உள்ளார்.. இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

மனைவி பெயர் ரகமத் பேகம் என்கிற யாஸ்மின்.. 31 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக் தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
தகாத உறவு - மனைவி பிடிவாதம்
இப்படிப்பட்ட சூழலில், அப்துல் அஜீசுக்கும், ரகமத் பேகம் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் கணவர் ஷேக் தாவூதுக்கு தெரிந்துள்ளது.. இதனால் மனைவியை கண்டித்திருக்கிறார்.. பிறகு, குடும்பத்தினர் அனைவருக்குமே தெரிந்துவிடும், கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து அறிவுரை தந்துள்ளார்கள்.. ஆனாலும் இருவருமே அவர்களின் பேச்சை கேட்காமல் உறவை தொடர்ந்தனர்..
இதனால், ஷேக் தாவூதுவிற்கும், ரகமத் பேகத்துக்கும் தினமும் தகராறு வெடித்தது.. தங்களது கள்ள உறவுக்கு கணவர் குறுக்கே நிற்பதால், அவரை கொன்றுவிட ரகமத் பேகமும், அப்துல் அஜீஸூம் பிளான் போட்டனர்.
சதித்திட்டம் தீட்டிய மனைவி
இந்நிலையில், கடந்த 2021, ஜூன் மாதம் 2ம் தேதி, ஷேக் தாவூதுவிற்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனது.. இதையே சாக்காக பயன்படுத்திக்கொண்ட ரகமத் பேகம், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கணவரை அழைத்து சென்றார்.. அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தார்.. பிறகு அதற்கான மாத்திரைகள் வந்து, கணவரை அன்பாக கவனித்து கொள்வது போல நடித்தார்..
ஆனால், 2 நாள் கழித்து, அதாவது, 4ம் டாக்டர்கள் எழுதி கொடுத்த மாத்திரைகளுக்கு பதிலாக 10 தூக்க மாத்திரைகளை அப்துல் அஜீஸ், ரகமத் பேகத்திடம் தந்துள்ளார்.. மறுநாள் 5-ந் தேதி இரவு 5 தூக்க மாத்திரைகளை கணவருக்கு தந்து சாப்பிட வைத்துள்ளார்.. கணவரும் அதை சாப்பிட்டதுமே தூங்கிவிட்டார்.
திமிறிக்கொண்டு முனகல் சத்தம்
பிறகு நள்ளிரவு 2 மணிக்கு, ஷேக் தாவூதுவின் முகத்தில் கள்ளக்காதலன் அழுத்த, கணவரின் இரண்டு கால்களையும் கெட்டியாக அமுக்கி பிடித்துக்கொண்டாராம் மனைவி.. பிறவியிலேயே வாய் பேச முடியாத ஷேக்தாவூது , திமிறிக்கொண்டு முனகல் சத்தம் எழுப்பியிருக்கிறார்.. இந்த சத்தம் கேட்டு அவரது பெரியப்பா மகன் சபீ என்பவர் ரூமுக்குள் நுழைந்து, என்னாச்சு? என்று கேட்டுள்ளார்..
அதற்கு ரகமத் பேகம், இது எங்கள் குடும்ப பிரச்சினை, இதில் தலையிட்டால் உன்னையும் கொன்று விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.. இதனால் பயந்துபோன சபீ அங்கிருந்து அலறி வெளியே வந்துவிட்டார்.. பிறகு மீண்டும் கணவரை தலையணையால் அழுத்தவும், அவர் மூச்சு திணறி இறந்துவிட்டார்.. காலை 7 மணிக்கு, உடல்நலம் மோசமாகி இறந்துவிட்டதாக நாடகமாடினார் மனைவி.
வெளியான குட்டு
பிறகு இறுதிச்சடங்குகளும் ஆரம்பமாயின.. ஆனால் அதற்குள், நள்ளிரவில் நடந்த அக்கிரமங்களை ஒன்றுவிடாமல் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டார் சபீ.. இதையடுத்து, காந்தி மார்க்கெட் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல் ஜோடி இருவரையும் கைது செய்தனர்.. இது சம்பந்தமான விசாரணையும் திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.. நேற்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. குற்றம்சாட்டப்பட்ட அப்துல் அஜீசுக்கும், ரகமத் பேகத்திற்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு அளித்துள்ளார்.. இந்த தீர்ப்பானது திருச்சியின் கவனத்தை பெற்று வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications