"அது" மேலயே ஏறி உட்கார்ந்த மணிகண்டன்.. திருச்சியில் ஒலித்த அந்த "விநோத" சத்தம்.. அலறிய அரியமங்கலம்
திருச்சி: திருச்சி சுடுகாட்டில், நேற்று முழுவதும் ஒரே சத்தமாக இருந்ததாம்.. வினோத ஒலிகளும் கிளம்பி வந்ததாம்.. என்ன காரணம் தெரியுமா?
திருச்சியை சேர்ந்தவர் ராஜகோபால் - மேரி.. காதலித்து திருமணம் செய்தவர்கள்.. இவர்களின் மகன் மணிகண்டன்... 45 வயதாகிறது.. மணிகண்டன் சின்ன வயசிலேயே காசிக்கு போய் அகோரியாக மாறிவிட்டார்.

அதனால் எப்பவுமே அவர் உடம்பு பூராவும் திருநீறுதான் பூசியிருப்பார்... திடீர் திடீரென்று நடுராத்திரி உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டு பூஜை செய்வார். அப்படியே எழுந்து சுடுகாட்டுக்கு போய்விடுவார்.
காளி கோயில்: அங்கே எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை பிட்டு சாப்பிடுவார். இவர் மட்டுமல்ல... பெரும்பாலான அகோரிகள் எல்லாருமே இப்படித்தான் செய்வார்கள்... திருச்சி உய்யகொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோர காளி கோயில் ஒன்று உள்ளது. இதை மணிகண்டன்தான் கவனித்து வருகிறார். அமாவாசை, பவுர்ணமி நேரங்களில் பூஜைகளை நிறைய நடத்துவார் மணிகண்டன்.
இவரது அம்மா 3 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. அப்போதுகூட அம்மாவின் சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு, பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அகோரி பூஜைகள்: அதேபோல, அகோரி முறைப்படி இறந்தவர்களுக்கு பூஜை செய்ய வேண்டுமானால், மணிகண்டனிடம்தான் சடலத்தை கொண்டுவருவார்கள். சுடுகாட்டுக்கு உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு சிஷ்யர்களுடன் சுடுகாட்டுக்கு செல்வார்.. அப்போது, வழியெல்லாம் விசித்திர ஒலியை எழுப்பிக்கொண்டே வருவார் மணிகண்டன.
சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, மந்திரங்கள் ஜெபித்து ஆன்ம சாந்தி பூஜை செய்வார். அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபடுவார்கள். இப்படிப்பட்ட வினோத பூஜையெல்லாம் காசியில் மட்டுமே காணமுடியும் என்பார்கள்.. ஆனால், இதை திருச்சி சுடுகாட்டில் அரங்கேற்றி வருவதால், அடிக்கடி செய்திகளில் மணிகண்டனின் பெயர்கள் வந்துபோகும். அப்படித்தான், இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மாரடைப்பு: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.. 60 வயதாகிறது.. இவர் ஒரு டீ மாஸ்டர்.. நேற்று திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.. இதனால், உறவினர்கள் அவரது உடலை திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு எரியூட்டுவதற்காக வந்தனர்.. அப்போது, பாலசுப்பிரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டனிடம் கேட்டுக் கொண்டார்கள்.
அதன்படியே, காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன், தன் சீடர்களுடன் உடல்முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்தார். அப்போது இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது வழக்கமான இறுதி சடங்குகளை செய்தார்.
தகன மேடை: பிறகு தகன மேடையில் உள்ள பாலசுப்ரமணியனின் சடலத்தின் மீது மணிகண்டன் ஏறி உட்கார்ந்து கொண்டார். அகோர மந்திரங்கள் ஓதப்பட, பூஜைகளும் ஆரம்பமாகின. சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என்று சுடுகாட்டில் முழக்கமிட்டனர். பிறகு, பாலசுப்பிரமணியனின் உடலுக்கு தீபாராதனை காண்பித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications