கட்டை பையில் பெண் குழந்தை.. விக்கித்து போன திருச்சி.. விடியற்காலையில் பரபரப்பு!
திருச்சி: தெருவில் இன்று விடிகாலை நடந்து கொண்டிருந்த ஷாஜகான், கட்டை பையிலிருந்து வந்த குழந்தை சத்தத்தை கேட்டதும் ஒரு கணம் விக்கித்து நின்றுவிட்டார்!!
திருச்சி கே.கே.நகர் காஜாமலை முஸ்லீம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு வயது 47. இன்று காலை 5.30 மணிக்கு அவரது தெருவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதே தெருவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பிருந்து அழுகை சத்தம் வந்ததால் அங்கே அருகில் சென்று பார்த்தார். அப்போது ஒரு கட்டை பையில் இருந்து சத்தம் வந்ததால், அதை திறந்து பார்த்தார்.
அப்போது, பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை ரோட்டில் கொண்டு வந்து யாரோ போட்டிருப்பதை அறிந்த ஷாஜகான் உடனடியாக கே.கே.நகர் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசாரும் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
ரோஸ் கலரில் கண்ணை கூட முழுசா திறக்க முடியாத அந்த பெண் குழந்தை பார்க்க அந்த பகுதி மக்கள் கூடிவிட்டார்கள். மீட்கப்பட்ட குழந்தையை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவை குழந்தைகள் மையத்தில் பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர். யார் கொண்டு வந்து குழந்தையை போட்டிருப்பார்கள், குழந்தை யாருடையது என்றெல்லாம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications