நாளை முதல்.. செயல்பாட்டுக்கு வருது பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.. வெளியான பேருந்துகள் வழித்தடம்
திருச்சி: திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:
விரைவுபேருந்துகள் / புறநகரப் பேருந்துகள்
சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழையபால்பண்ணை,தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர்/கும்பகோணம்/வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
நாமக்கல்/சேலம் /பெங்களூரு மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை,டிவிஎஸ் டோல்கேட், क्र.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.
புதுக்கோட்டை/அறந்தாங்கி/ராமேஸ்வரம் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
கரூர்/ஈரோடு/திருப்பூர்/கோயம்புத்தூர் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
மணப்பாறை/திண்டுக்கல்/பழனி/குமுளி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
மதுரை/தூத்துக்குடி/விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
நகரப் பேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
ஆம்னி பேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
உள் வருகை மற்றும் வெளிச்செல்கை (Entry and Exit)
அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண். 2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.
பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.
பயணிகளுக்கான வசதிகள்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் 10 கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், 10 எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் (Snacks) செயல்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications