5 சென்ட் கிடைச்சா கூட லக்..பறக்கப் போகுது பஞ்சப்பூர்! புதிய பேருந்து நிலைய திறப்பு எப்போது தெரியுமா?
திருச்சி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது. பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம், டைடல் பார்க், சோலார் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இருக்கும் நிலையில் அங்கு வீட்டுமனைகள், நிலங்கள் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் தற்போது நெரிசல் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

உதாரணத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்து மாறி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதை அடுத்து பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து பஞ்சப்பூர் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமல்லாது சோலார் திட்டங்கள், சரக்கு வாகன நிறுத்த முனையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் திட்டங்கள் ஆகியவற்றோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிக, புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சபூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி வரும் அரசு திட்டங்களை கருத்தில் கொண்டு அதிக அளவில் மக்கள் அங்கு வீட்டுமனைகள், நிலங்கள் ஆகியவற்றை வாங்கி குவித்து வருகின்றனர்.
குறிப்பாக தங்கும் விடுதிகள், உணவகங்கள், கட்டிடங்கள், சிறு சிறு வணிக வளாகங்களும் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் உணவகங்கள் டீக்கடைகள் ஆகியவையும் பெருகி வருகிறது. இந்த நிலையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திறந்து வைக்கிறார். இந்த நிலையில் தற்போது பணிகள் 99 சதவீதம் நிலையில் ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பணிகள் குறித்து தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கேஎன் நேரு இன்று ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். மேலும் மிச்சம் இருக்கும் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் அந்த பணிகள் நிறைவடைந்து விடுமெனவும் மே ஒன்பதாம் தேதி திட்டமிட்டபடி பேருந்து நிலையம் திறக்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு. மேலும் தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications