Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியை திணறடித்த மதிமுக மாநில மாநாடு.. ஆவேசமாக பேசிய துரை வைகோ! ஆர்ப்பரித்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அண்ணா 117-வது பிறந்த நாள் விழா மதிமுக மாநில மாநாடு திருச்சி அருகே சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. திருச்சியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இந்த மாநாட்டில் தொண்டர்கள் குவிந்தனர். வைகோ பேசிமுடிக்கும் வரை மதிமுகவினர் வந்து கொண்டே இருந்தனர். எந்தவித சினிமா கவர்ச்சியோ, நாயக பின்புலமோ இல்லாமல் புற்றீசல் போல் திருச்சிக்கு வரும் அனைத்து சாலைகளிலும் மதிமுகவினர் வந்ததை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.

அறிஞர் அண்ணாவின் 117-ஆவது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி சிறுகனூரில் நேற்று (திங்கட்கிழமை) மதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. வருடம் தவறாது செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை மாநாடாக நடத்துவது மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் வழக்கம்.

trichy-resonates-with-mdmk-state-conference-durai-vaiko-s-powerful-address

திருச்சியில் மதிமுக மாநாடு

அந்த வகையில் இந்த வருடமும் அண்ணா பிறந்தநாள் விழாவை திருச்சியில் நடத்துவது என முடிவு செய்து கடந்த 2 மாதங்களாக மதிமுகவினர் கடுமையாக உழைத்து வந்தனர். வழக்கமான மதிமுக மாநாட்டை விட இந்த முறை அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மதிமுக முதன்மை கழக செயலாளர் முதன்முறையாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அதோடு அவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அவரது பணிகளும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொண்டு வருகிறது. இந்த வருடம் மதிமுக மாநாடு என்பது முழுவதும் துரை வைகோவின் மேற்பார்வையில் தான் நடைபெற்றது. தொகுதிப்பணி, டெல்லியில் துணை குடியரசு தலைவர் தேர்தல், நாடாளுமன்ற அலுவல் பணிகள் என ஓடி கொண்டு இருந்தாலும் டெல்லியில் இருந்தபடியே மாநாட்டு பணிகளை விரட்டி கொண்டு இருந்தார்.

திணறிப்போன திருச்சி

trichy-resonates-with-mdmk-state-conference-durai-vaiko-s-powerful-address

துணை பொதுசெயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அனைவரது ஒத்துழைப்போடு கடந்த இரண்டு மாதங்களாக மதிமுகவினர் ஓடி பணி செய்ததன் முடிவை நேற்றைய மாநாட்டில் காண முடிந்தது. "மதிமுக எங்கே இருக்கிறது?" என்று யாரேனும் கேட்டால், "மதிமுக திருச்சியை திணறடித்து கொண்டு இருக்கிறது" என்ற அளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் துரை வைகோவின் பேச்சு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக அமைந்ததை பார்க்க முடிந்தது. "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்று கூறும் போது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்ததை காண முடிந்தது.

15 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்

மதிமுகவினரின் மாநாட்டு முழக்கமான "அணி திரள்வோம், ஆர்ப்பரிப்போம், அங்கீகாரம் பெறுவோம்" என்ற முழக்கம் மதிமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு முழுவதும் இருந்து குழுமிய தொண்டர்கள், "மதிமுக இன்னும் பட்டு போகவில்லை, வைகோவின் கட்டுப்பாட்டில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது" என்பதை காண முடிந்தது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றிலும் 15 கிமீ அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வைகோ பேசி முடிக்கும் வரை மதிமுகவினர் வந்து கொண்டே இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு தவேக தலைவர் விஜய் திருச்சி தேர்தல் பரப்புரைக்கு வந்த போது ஏற்பட்ட கூட்டத்தை பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.

சினிமா கவர்ச்சி இல்லாமல் கூட்டம்

ஆனால் எந்தவித சினிமா கவர்ச்சியோ, நாயக பின்புலமோ இல்லாமல் புற்றீசல் போல் திருச்சிக்கு வரும் அனைத்து சாலைகளிலும் மதிமுகவினர் வந்ததை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர். மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததோடு, வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் அங்கீகாரம் பெற கால்கோள் நாட்டு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+