முழு ஊரடங்கு இல்லை.. ஆனாலும் திருச்சியில் வெறுச்சோடிய சாலைகள், கடைவீதிகள்!
திருச்சி: முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாமலேயே திருச்சியில் நேற்று சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடின.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நேற்று முதல் 4 நாட்களுக்கும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து இருக்கிறார்கள்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் நேற்று தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்படுவதற்கும், இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, நேற்று திருச்சி நகரில் காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, பாலக்கரை மெயின்ரோடு பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பெரிய கடைவீதி பகுதியில் கடந்த சில நாட்களாகவே மக்கள் ஊரடங்கை மீறி திருவிழா கூட்டம் போல் கூடினார்கள். இதுபற்றி பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின. இதன் காரணமாக இந்த இடங்களில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். நேற்று காலை முதல் மதியம் வரை மன்னார்புரம், கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். தேவை இல்லாமல் சென்றவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் காரணமாகவும் திருச்சி நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நகரம் போல் காட்சியளித்தது.
Recommended Video
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications