திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி மாணவிகளின் வெடியில்லா தீபாவளி அணிவகுப்பு... 3 ஆயிரம் பேரின் அசத்தல் முயற்சி!

Google Oneindia Tamil News

திருச்சி : மாசில்லாத தீபாவளியை கொண்டாடும் விதமாக திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3 ஆயிரம் மாணவிகள் பட்டாசு மற்றும் பூச்சட்டி வடிவில் நின்ற காட்சி காண்பதற்கு பிரமிப்பாக இருந்தது.

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதிலும், மத்தாப்பு கொளுத்துவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்த பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வெடிப்பதற்கும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்து உள்ளது. குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

Trichy school conducted cracker free diwali awareness program

பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக மாசற்ற தீபாவளியை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்ற பிரசாரமும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று யுகா பெண்கள் அமைப்பின் சார்பில் வெடியில்லா தீபாவளி என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சமூக ஆர்வலர் அல்லி ராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பள்ளி மாணவிகள் பள்ளி மைதானத்தில் சில வகையான பட்டாசுகள் மற்றும் பூச்சட்டி வடிவில் இணைந்து நின்றனர். திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாசற்ற தீபாவளி கொண்டாட மாணவ சமுதாயம் முன்வரவேண்டும் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்படவேண்டும் என்பதற்காக செடிகளும் பரிசாக வழங்கப்பட்டன.

English summary
Trichy school conducted cracker free diwali awareness program nearly 3 thousand students assemble in open ground like crackers and flower pots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X