பட்டாணி கொடு.. காசெல்லாம் தரமுடியாது! திருச்சியில் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்த எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சியில் இலவசமாக பட்டாணி கேட்டு கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராதா. இவா் கடந்த திங்கட்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பட்டாணி கேட்டுள்ளார். எத்தனை ரூபாய்க்குத் தர வேண்டும் என கடை உரிமையார் ராஜன் கேட்டபோது, பணம் எல்லாம் தர முடியாது. யூனிஃபார்மில் உள்ள போலீசிடம் பணம் கேட்கிறாயா எனக் கோபமாக கேட்டுள்ளார்,

இதனால் கடை உரிமையாளருக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாவுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் விடாப்பிடியாக வற்புறுத்தி இலவசமாகவே பட்டாணியை கேட்டு பெற்றுச் சென்றுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாவை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடைக்காரரிடம் இலவசமாக பட்டாணி கேட்டு மிரட்டிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications