அரசியலுக்கு வந்தீங்களா, நடிக்க வந்தீங்களா அண்ணாமலை? திருச்சி சூர்யா சிவா சரமாரி கேள்வி
திருச்சி: பார்முலா 4 கார் ரேஸ் விளையாட்டிற்காக தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி திமுக பணம் பறிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறலாமா? வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா? என்று திருச்சி சூர்யா சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.
பார்முலா 4 கார் ரேஸ் விளையாட்டிற்காக தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி திமுக பணம் பறிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறலாமா? வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா? அண்ணாமலையின் செல்லப்பிள்ளை, பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவராக இருக்கக் கூடிய அலிஷா அப்துல்லாஹ், தமிழக முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அவர்களை சந்தித்து பார்முலா ரேஸ் குறித்து உரையாடி ஆதரவு தெரிவிக்கின்றார். ஆனால், அதே கட்சியின் மாநில தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை அவர்கள் அதை கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார்.

அரசியலுக்கு வந்தீங்களா? நடிக்க வந்தீங்களா? அண்ணாமலை? // தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது// என்று கூறும் அண்ணாமலை, மோடி கபடி லீக் என்ற பெயரில் அமர்பிரசாத் ரெட்டி செய்த ஊழல், முறைகேடுகளும் பொதுநல ஆசைகளுக்காக செய்யப்பட்டதா? அமர் பிரசாத் ரெட்டி மீது 'கை நீட்டி' எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாடு பாஜகவினரால் மிரட்டப்பட்ட தொழிலதிபர்கள் லிஸ்ட் வேண்டுமா? இந்திய அளவில் அமலாக்கத்துறையை ஏவி, பின்னர் தேர்தல் பத்திரத்திற்கு பணம் வசூலிக்கப்பட்ட கதை தான் ஊரே நாறியது்?
விளையாட்டு துறையில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்த சாக்ஷி மாலிக்கும், வினேஷ் போகாட்டும் - இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர். ஆனாலும், பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற பாஜக ஏன் துணை நின்றது? பொது நல ஆசைகளுக்காகவா?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி காண்பித்த கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி பெருமிதம் அடைந்த போது தெரியவில்லையா அது தமிழ்நாடு அரசு நடத்திய நிகழ்ச்சி என்று.. தற்போது ஃபார்முலா ரேசை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தி விட்டால் மாநில அரசின் விளையாட்டு துறை பெயர் வாங்கிவிடும் என்பதற்காக அபாண்டமாக குற்றம் சாட்டுவது சரியா?
குற்றம் சாட்டுவதை விட தொழில் அதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதற்கு தகுதி இருக்கிறதா?" இவ்வாறு திருச்சி சூர்யா சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications