திருச்சி வங்கியின் பார்க்கிங் ஏரியாவில்.. கடனை கட்டாத விவசாயி இருந்த கோலம்.. ஓடி வந்த பொதுமக்கள்
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் என்பவர் மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் குழு கடனாக 40,000 கடன் தொகை பெற்றுள்ளார்.இவரை வலுக்கட்டாயமாக வங்கியின் கார் பார்க்கிங் ஏரியாவிற்கு அழைத்து சென்ற வங்கி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அடிதாங்கமால் அலறிய விவசாயியை பொதுமக்கள் ஓடி வந்து மீட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். (56) இவர் மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் குழு கடனாக 40,000 கடன் தொகை பெற்றுள்ளார். இதில், மொத்தம் 24 மாதத்திற்கு 17 மாதம் கடன் தொகை செலுத்தியுள்ளார்.

கடன் நிலுவை தொகை
மீதி ஏழு மாதங்களுக்கு பணம் கட்ட தாமதமாகி விட்ட நிலையில் முந்தைய மாதம் முருகேசன் வீட்டுக்கு சென்ற விக்னேஷ் என்ற தனியார் வங்கி ஊழியர் அங்கு இருந்த முருகேசன் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் உங்களிடம் பணம் செலுத்த முடியாது என்றும் வங்கிக்கு சென்று கட்டி விடுகிறேன் என்று கூறினாராம்.
தரக்குறைவாக பேச்சு
அதேபோல், இந்த மாதமும் வீட்டு சென்ற வங்கி ஊழியர் விக்னேஷ், தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் வங்கிக்கு நேராக வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இதனையடுத்து, நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பேருந்தில் வருகிறேன் என்று சொல்லி முருகேசன் மினிபஸ்ஸில் மணப்பாறைக்கு பயணம் செய்திருக்கிறார்.
வங்கி ஊழியர்கள் அதிரடி
அப்பொழுது வங்கி ஊழியர்கள் இரண்டு பேர் மினிபஸ்ஸின் இடதுபுறமும், வலது புறமும் என பேருந்து சைடாக டூவீலரில் பின் தொடர்ந்து பாதுகாவலர் போல் சென்று உள்ளனர். முருகேசன் மணப்பாறையில் இறங்கி தனியார் வங்கிக்கு சென்றபோது அவரை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் வேன் ஸ்டாண்ட் பின்புறத்தில் அதாவது வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு அவரைப் பிடித்து சென்று சரமாரியாக அடித்தார்களாம்.
பொதுமக்கள் மீட்டனர்
அப்போது வலி தாங்காமல் முருகேசன் கதறி அழுதுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பதறியபடி ஓடிச்சென்று வங்கி ஊழியரியரிடமிருந்து முருகேசனை மீட்டுள்ளனர். அப்போது வங்கி ஊழியர் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் தாக்குதல் நடத்திய வங்கி ஊழியரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட விவசாயி முருகேசன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications