ஏங்க டிவியில எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்... புகழேந்தி குறித்து டிடிவி தினகரன் கூல் பதில்
Recommended Video
திருச்சி: புகழேந்தி விவகாரம் தொடர்பாக எல்லாவற்றையும் டிவியில் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து முக்கியமானவர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்கதமிழ்ச் செல்வன், பரணி கார்த்திகேயன் என பலர் வெளியேறி திமுகவில் இணைந்தனர்.
அதுபோல் புதுவையில் அமமுக கூடாரமே காலியாகிவிட்டது. இந்த நிலையில் அடுத்தது சசிகலாவின் விசுவாசியான புகழேந்தியும் அடுத்த கட்சிக்கு தாவுவதற்கான சமிக்ஞைகள் வந்துள்ளன. தற்போதெல்லாம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றால் சர்ச்சைக்குரிய வகையில் கட்சித் தலைவரை விமர்சனம் செய்துவிட்டு அதை அவர் கண்ணில் படும்படி வீடியோவாக அனுப்பினால் போதும்.

தொண்டர்களுடன் பேசும் வீடியோ
கட்சித் தாவல் தானாக நிகழ்ந்துவிடும். அந்த வகையில் புகழேந்தி கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொண்டர்களுடன் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நாம் போகும் போது நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன்.

எடிட்டட்
14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகழேந்தி கூறுகையில் வீடியோ உண்மைதான். ஆனால் அதில் எடிட் செய்யப்பட்டுள்ளது.

தினகரன்
நான் பேசியதை வேண்டுமென்றே ஐடி பிரிவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நான் தவறு செய்திருந்தால் கட்சி தலைமை என்னை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமா இல்லையா என்றார் புகழேந்தி. இந்த நிலையில் இதுகுறித்து திருச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

விசாரணை
அப்போது அவர் கூறுகையில் புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தினகரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications