திருச்சி ஆலயத்தில் கட்சி சின்னத்துடன் விஜய் வழிபாடு: தேர்தல் விதிமீறலால்.. அரசியல் களத்தில் பரபரப்பு
திருச்சி: தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் நேற்று ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் மண்டியிட்டபடி சென்று வழிபாடு செய்தார். தேவாலயத்தில் கட்சி சின்னம் அணிந்த துண்டுடன் சென்று விஜய் வழிபாடு செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதியை மீறிய விஜய் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சார களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் நேற்று ரோடு ஷோ மேற்கொண்டார். இதனிடையே திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது ஆலயத்தில் மண்டியிட்டு விஜய் பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்து முடித்த பிறகு விஜய் மீண்டும் ரோடு ஷோ புறப்பட்டார்.
அரசியல் கட்சியினர் கட்சி அடையாள சின்னத்துடன் மதவழிபாட்டு இடங்களுக்குள் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதி உள்ளது. இந்நிலையில், விஜய் கட்சி அடையாளத்துடன் கூடிய துண்டுடன் ஆலயத்திற்குள் சென்று வழிபாடு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் இந்த செயல்பாட்டு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. த.வெ.க. தலைவர் விஜய் இதை மீறி இருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
விஜய் ஜாதகத்தில் சுக்கிர திசை! 2034 வரை அசைக்க முடியாது! அண்ணாமலைக்கும் யோகம்! ஷெல்வி கணிப்பு -
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி!












Click it and Unblock the Notifications