விஜய் கையில் ‘வேல்’.. கையில் வாங்கியதுமே உற்சாகமாக கையசைத்த விஜய்! அடுத்து பெரியார் படம்!
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தவெக தொண்டர்கள், முருகன் வேல் ஒன்றை விஜய்க்கு பரிசாக வழங்கியுள்ளனர். வேலை பெற்றுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் விஜய். மேலும், தொண்டர்கள் அளித்த பெரியார் படத்தையும் பெற்றுக்கொண்டார் விஜய்.
தமிழக அரசியல் களத்தில் 'வேல்' தொடர்ச்சியாக பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு வேல் அன்பளிப்பாக அளிப்பது, முருகன் பற்றிப் பேசுவது என அதைச் சுற்றி அரசியல் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் திமுக அரசே அண்மையில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டையும் நடத்தியது.

தமிழக அரசியல் களத்தில் வேல்
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இருந்தே முருகனை தூக்கிப் பிடித்து வருகிறது. முப்பாட்டன் முருகன் எனப் பேசி வருகிறார் சீமான். 2015ஆம் ஆண்டு முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் துவங்கினார் சீமான். தொடர்ந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமெனக் கோரி வீரத்தமிழர் முன்னணி பேரணி ஒன்றை நடத்தியது. 2016ஆம் ஆண்டில் இருந்து வேல் வழிபாடு என்ற பெயரில் தைப்பூச நாளில் விழா ஒன்றையும் நடத்தி வருகிறது நாதக.
பாஜக 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. 2020 ஆம் ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்தார். திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய எல். முருகனை காவல்துறை கைது செய்தது.
முருகன்
இந்நிலையில், மதுரையில் கடந்த ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்தியது இந்து முன்னணி. இந்த மாநாட்டிற்கு, பாஜகவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளித்தன. அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் திமுக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பெரியார், அண்ணா குறித்தும் மேடையில் விமர்சித்துப் பேசப்பட்டது.
உற்சாகமாக பெற்றுக்கொண்ட விஜய்
இப்படியாக, தமிழக அரசியல் களத்தில் வேல் முக்கியப் பாத்திரம் வகித்து வரும் சூழலில் இன்று திருச்சியில் முதல் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, அக்கட்சித் தொண்டர்கள் முருகனின் வேலை பரிசாக வழங்கி உள்ளனர். வேலை பெற்றுக்கொண்ட விஜய் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "வெற்றி வேல் வீர வேல்.. வேலுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்" என்ற கேப்ஷன்களுடன் தவெகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பெரியார் படம்
மேலும், இந்தப் பயணத்தின்போது தவெக தொண்டர்கள், விஜய்யிடம் பெரியார் படத்தையும் வழங்கினர். அதையும் பெற்றுக்கொண்டுள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக பெரியாரை விஜய் வரித்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications