8 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட உதயநிதி.. காலை 10.50 மணிக்கு கைது.. மாலை 6.50-க்கு விசாரணை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு பதில் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் தஞ்சாவூர் கிழக்கு காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காலையில் 10.50 மணிக்கு உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில் மாலை 6.50 மணிக்கு அவர் செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

சுமார் 8 மணி நேரமாக அவர் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இடையில் சிறுநீர் கழிக்க கூட வாகனம் நிறுத்தப்படவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். முதலில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தான் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் அங்கு திமுகவினர் ஏராளமானோர் குவிந்ததால் போலீசார் கடைசி நேரத்தில் திட்டத்தினை மாற்றியுள்ளனர்.

Chengipatti Police Station

எனினும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கும் திமுகவினர் குவியத் தொடங்கினர். செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பாக திமுகவினர் நூற்றுகக்ணக்கில் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டனர். பேரிகார்டுகளை தள்ளிவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் காவல்நிலையத்திற்கு வெளியே போலீஸ் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் தஞ்சை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தத் தான் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. எனவே செங்கிப்பட்டி காவல் நிலையம் என்றால் வேனில் இருந்து இறங்கமாட்டேன் என கூறியிருந்தார்.

இதனால் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தொண்டர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் செங்கிப்பட்டி போலீஸ் நிலையம் வருகை தந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+