"கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்க வக்கு இல்லை!' விடுதலையான உடனே விஜய்யை விமர்சித்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: போலீஸ் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் காவிரி விஷயம் குறித்தும் விவசாயிகள் குறித்தும் மட்டுமே பேசியதாகவும் அவதூறாக எதையும் பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார். மேலும், காவிரியில் தமிழ்நாட்டிற்கான தண்ணீரை கேட்டு பெற இந்த அரசுக்கு வக்கு இல்லை என்றும் கடுமையாக சாடினார்.

தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இன்று காலை கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்காக தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், தஞ்சையில் திமுக கூட்டம் அதிகம் கூடியதால்.. திருச்சி செங்கிப்பட்டியிலேயே வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Udhayanidhi Stalin TVK DMK

உதயநிதி

சுமார் 1.30 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், அதன் பிறகே உதயநிதி விடுவிக்கப்பட்டார். அங்கு மழை பெய்த போதிலும், திமுக தொண்டர்கள் உதயநிதி விடுவிக்கப்படும் வரை காத்திருந்தனர். அதன் பிறகு சாலை மார்க்கமாக திருச்சி வந்த உதயநிதி, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தவெக அரசை கடுமையாக சாடினார்.

விவசாயிகள் குறித்து மட்டுமே பேசினேன்

உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசுகையில், "எங்கள் தலைவரின் உத்தரவின்படி தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். நானும் அதில் கலந்து கொண்டு பேசினேன். என்னோடு சேர்ந்து எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் நிறைய பேர் அதில் கலந்து கொண்டனர். நான் அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் பேசினேன்.

இந்த ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு என்னென்ன விதமான துரோகங்களைச் செய்திருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் என்ன பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளனர். விவசாயிகளை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது குறித்து எனது பேச்சு முழுக்க முழுக்க இருந்தது.

காவிரி நீர்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக முயற்சி பண்ணிட்டு இருக்கு. அங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, மேகதாது அணை கட்டுவோம் தொடர்ந்து சொல்லிட்டு இருக்காரு. தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரையும் திறந்துவிடவில்லை. திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாசமும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படும். இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகள் ஜூன் 12க்கு முன்னாடியே தண்ணீரை திறந்துவிடுவோம்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த வருஷம் ஜூன் மாசம் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஜூன் முடிந்து, ஜூலை போய் ஆகஸ்ட் மாதமே வந்துவிட்டது. ஆனால், இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்க வக்கு இல்லாத அரசாக தவெக அரசு இருக்கிறது. தண்ணீரை கேட்டு பெறுவதற்கும் இந்த அரசுக்கு வக்கு இல்லை.

வக்கு இல்லை

கர்நாடகாவை எதிர்த்துப் பேசுவதற்கு வக்கு இல்லை.. தைரியம் இல்லை.. தெம்பு இல்லை! இந்த முதலமைச்சர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். சட்டசபையில் பேசும்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பிரச்சனை கிடையாது என்றே நான் கூறினேன். நம்ம மாநில விவசாயிகளுடைய பிரச்சனை.. நம்ம அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம். நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என தொடர்ந்து சொல்லி வந்தேன். அதற்கும் பதில் இல்லை.

கடந்த 3 மாதங்களில் தவெக அரசில் உள்ள அமைச்சர்கள் என்னவெல்லாம் செய்துள்ளனர் என்பது குறித்தும் பேசினேன். ஆதாரத்தோடு அனைத்தையும் குறிப்பிட்டு பேசினேன். அதற்கெல்லாம் பதில் சொல்றதுக்கு தெம்பில்லாத, திராணி இல்லாத, வக்கு இல்லாத ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு நான் பேசாத ஒரு விஷயத்தை கட் காப்பி பேஸ்ட் பண்ணி, சில விஷயங்களை சேர்த்து பொய்யை பரப்பி வருகிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை.. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக தான் பேசினேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+