சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த உதயநிதி
திருச்சி: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவேண்டும் என கட்சி தலைமைக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் வைத்த இந்த கோரிக்கைக்கு மாநாட்டுத் திடலில் இருந்த இளைஞர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சி மாநாடு
திமுகவையும், திருச்சியையும் பிரிக்கமுடியாது என்பதற்கேற்ப திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. அந்த புத்தகத்தில் இடம்பெற்ற திட்டங்கள் பற்றி மக்களிடம் முறையாக எடுத்துச்சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டன.

திடீர் வருகை
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் உதயநிதி கலந்துகொள்வார் என எந்த இடத்திலும் விளம்பரங்கள் கொடுக்கப்படாத நிலையில், திடீர் வருகை புரிந்தார் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சி நிரலில் அவர் கலந்துகொள்வது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. ஆனால் திடீரென அவர் மேடைக்கு வந்தது அங்கிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வியப்பை தந்தது. உதயநிதியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை வரவேற்று பேசிய நேரு, உதயநிதியையும் பேசுமாறு கூறி பேச வைத்தார்.

உதயநிதி கோரிக்கை
மைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின், தன்னை திடீரென நேரு பேச கூறிவிட்டார் என கலகலப்புடன் பேச்சை தொடங்கினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞரணி தம்பிமார்களுக்கு குறைந்த வாய்ப்பே அளிக்கப்பட்டதாகவும், ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர வேண்டும் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்டு ஆமோதிப்பது போல் பார்த்த ஸ்டாலின் சிரித்தார். கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோரும் ஸ்டாலினை பார்த்து சிரித்து அவர் ரியாக்ஷனை எதிர்பார்த்தனர்.

வீர வாள் பரிசு
உதயநிதி ஸ்டாலின் பெருந்தன்மையுடன் இந்த மாநாட்டிற்கு வந்து சென்றது மகிழ்ச்சி தருவதாகவும், காலையிலேயே அவர் தன்னை தொடர்பு கொண்டு மாநாட்டிற்கு நான் வருகிறேன் என கூறிவிட்டதாகவும் நேரு தெரிவித்தார். ஆனால் எந்த இடத்திலும் தனது படம் இருக்கக் கூடாது என உதயநிதி அன்புக்கட்டளை போட்டுவிட்டதாக நேரு பேசும் போது கூறினார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருந்து புறப்படும் முன்பு அவருக்கு வெள்ளி வீர வாள் பரிசாக தரப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications