கோரையாறு வழியாக காவிரியை நச்சாக்கும் கழிவுநீர்! திருச்சி பஞ்சப்பூரில் துர்நாற்றம்! மக்கள் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கோரையாறு வழியாக காவிரி நீரில் கலப்பது நீர் மாசு மற்றும் பொது சுகாதாரம் குறித்து கேள்விக்குள்ளாகியுள்ளது. இது போல் மாசடைந்த நீர் காவிரி நீரில் கலக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் சிந்தாமணி பகுதிகளில் காவிரி நீர் பாய்ந்து வருகிறது. ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கருவிகள் சரி வர செயல்படாததால் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகளுக்கு வரும் கழிவு நீர் நிரம்பி காவிரி ஆற்றில் கலக்கிறது.

untreated sewage water

சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே இப்படி வெளியேறும் தண்ணீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது புதிய பேருந்து நிலையம் இயங்கும் பஞ்சப்பூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் இந்தப் பகுதி அருகே இருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கழிவுநீர் தண்ணீரில் கலப்பது மட்டுமல்லாமல் பஞ்சப்பூர் பகுதியில் தேங்கியும் இருப்பதால் இது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதான கருவிகளை பழுது நீக்கம் செய்து ஆற்றிலும் பொது இடங்களிலும் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி, அதன் கிளைக் கால்வாய் பாசனங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கழிவுநீரால் பாழாகும் நிலை உள்ளது. ஏற்கெனவே திருச்சியில் முக்கிய நீராதாரமான உய்யக் கொண்டான் கால்வாய் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ள நிலையில் தற்போது கோதையாறும் இந்த நிலைக்கு வந்துள்ளது அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவசூரியன் கூறியிருப்பதாவது: சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கோரையாற்றில் வெளியேற்றப்பட்டு அங்கிருந்து கால்வாய் மூலம் காவிரியில் கலக்கிறது. இது பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கழிவு நீரை பொது பயன்பாட்டிற்கு வெளியேற்றுவதற்கு முன்பு அதை முறைப்படி சுத்திகரிக்க வேண்டும். உய்யக்கொண்டான் கால்வாய் ஏற்கெனவே கழிவுநீரால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் பஞ்சப்பூர் காவிரியிலும் இதே நலைதான் ஏற்படும். திருச்சியை ஸ்மார்ட் சிட்டி என்றோ தூய்மையான நகரம் என்றோ பெருமைப்பேசுவது வெட்கக்கேடானது.

எனவே தமிழக அரசும் அதிகாரிகளும் உடனடியாக இந்த கோதையாறு விவகாரத்தில் தலையிட்டு கழிவநீர் சரியாக சுத்திகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்படாத நீர் , நீர் நிலைகளில் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும். இந்த நீர் நிலைகளில் கழிவுநீரை நேரடியாக அனுப்புவது பொதுமக்களுக்கு செய்யும் துரோகமாகும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+