விஜய்யுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பா? 2026ல் கூட்டணி உறுதி! கட் அண்ட் ரைட்டாக பேசிய திருமாவளவன்!
திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக இருக்கும் என்றும், திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் விசிக இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன், ராகுல்காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்பதாக தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்: பஞ்சமி நிலம் தொடர்பாக பிரச்சனை இருக்கிறது கலைஞர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம். அது குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்களை நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கவனம் இருக்கிறது.
இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி.
இந்தியா கட்சிகள் உருவாக்கியதில் எனக்கு பங்கு உண்டு. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை. 2026 நடைபெறும் சட்டமன்றத் தொகுதியில் கூட்டணி தொடரும்
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவனைத்து ஓராண்டு ஆகிறது ஏற்கனவே ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளது இருந்தது விகடன், ஆதங்அர்ஜுன் நிறுவனமும் இணைந்து இந்த புத்தகத்தை கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். 40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள் தான் எல்லோருக்கும் அம்பேத்கர் என்ற தலைப்பு உள்ளது.
இப்போது சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள். தவெக மாநாடுக்கு முன்பாக விஜய் அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன்.
திராவிடத்தைப் பற்றி ஏற்கனவே கருத்து சொல்லி உள்ளேன். திராவிடர் என்பது தமிழக அரசியல் என்பது பல பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது தவறு திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்வதை விட வாழ்ந்தோம் வரலாற்றுப் படைத்தோம் என்பதுதான் முக்கியமான அரசியல். சாதியம்தான் நம்மளை பிளவுபடுத்தி பிடித்துள்ளது, வீழ்த்தியுள்ளது. அதனை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும் அதிலிருந்து முற்றாக மாற்றம் செய்ய வேண்டும்.
பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதன நம்மளை விழுங்கி இருக்கும், ஹிந்தி தமிழை விழுங்கி இருக்கும். திராவிட பெரிய கருத்தியல் இல்லாமல் இருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் பாதுகாப்பு காரணம் திராவிட கருத்தியல் தான்" என்றார்.
-
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications