வாக்கு இயந்திரத்தில் விஜய் புகைப்படம் எங்கே? வாக்காளர்கள் கேட்ட கேள்வி.. விழுந்து சிரித்த அதிகாரிகள்
புதுக்கோட்டை: திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரங்களில் விஜய் புகைப்படத்தை காணவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியது பேசுபொருளாகி இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் இடம்பெறாது என்பதே தெரியாமல் சிலர் கேள்வி எழுப்பியது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் சேர்த்து 36.71% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மொத்தமுள்ள 5.73 வாக்காளர்களில் 2 கோடி வாக்காளர்கள் வாக்கினை போட்டுவிட்டனர். இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், இளைஞர்கள் பலரும் தேர்தலில் வாக்கு செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்ப விஜய் பிரச்சாரங்களில் அதிகளவில் இளைஞர்களே காணப்பட்டனர். நகர்ப்புறங்களில் இளைஞர்களிடையே விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் களமிறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் ஆதரவாளர்களால் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்து வரும் வாக்குப்பதிவின் போது சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பதிவிட்ட எக்ஸ் பதிவில், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் சில ஜாலியான சம்பவங்கள் நடந்துள்ளன.
சில வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் விஜய்யின் புகைப்படத்தை காணவில்லை என்று அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டுள்ளனர். இதனை கேட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் சிரிக்க தொடங்கி இருக்கின்றனர். ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே இடம்பெறும்.
இந்த அடிப்படை விஷயங்களை கூட அறியாமல் தவெக ஆதரவாளர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். இதன்பின் அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை ஓரிருவர் என்று அல்லாமல், ஏராளமானோர் கேட்டிருப்பது தான் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.
-
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை?










Click it and Unblock the Notifications