விஜய் தொகுதியில் இரவில் கள்ள ஓட்டு? வாக்குச்சாவடிக்குள் புகுந்த தவெக.. திருச்சியில் பரபரப்பு!
திருச்சி: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மதுரம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், இரவு 1 மணியான போதும் ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தவெகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று சுமூகமாக முடிவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் 80% மேல் வாக்குப்பதிவு நடந்திருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலை விடவும் சுமார் 20 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருக்கிறது.

முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதற்கு SIR நடவடிக்கை மட்டும்மல்லாமல், விஜய்யின் அரசியல் வருகையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் மாலை 6 மணி நிலவரப்படி திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77% வாக்குகள் பதிவாகி இருந்தது. இப்படியான சூழலில், திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
மதுரம் மேல்நிலைப் பள்ளியில் இரவு 1 மணியான பின்னரும் கூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தவெகவினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து திமுக மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அதிகாரிகள் கதவுகளை மூடிக்கொண்டு கள்ள ஓட்டு போட்டதாக காவல்துறையினரிடம் தவெகவினர் புகாரை முன்வைத்தனர்.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் கள்ள ஓட்டு குற்றச்சாட்டு எழுந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதில் தவெகவினர் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்












Click it and Unblock the Notifications