டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்சியில் அவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் பிழைகள் இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
வேட்புமனுவில் பிழைகள் இருப்பினும் அது, நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது தெரிந்தும், விஜய் தவறு செய்திருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பெரம்பூர் மனு விவரம்
பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில், "எஸ்.ஏ. சந்திரசேகரன் என்பவரின் மகனும் 52 வயதுடைய க. எண்: 36, கேசுரினா டிரைவ்,கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை சென்னை 600 041 என்ற முகவரியில் வசிக்கின்ற இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளருமாகிய ச.ஜோசப் விஜய் என்கிற நான், இதனால் சத்தியப் பிரமாணம் செய்து, கீழ்க்கண்டவாறு உறுதியளிக்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி கிழக்கு மனு விவரம்
அதுவே, திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில், "எஸ்.ஏ. சந்திரசேகரன் என்பவரின் மகனும் 51 வயதுடைய க. எண். 36, கேகரினா டிரைன்,கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை சென்னை 600 041 என்ற வசிக்கின்ற இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளருமாகிய ச. ஜோசப் விஜய் என்கிற நான், இதனால் சத்தியப் பிரமாணம் செய்து, கீழ்க்கண்டவாறு முகவரியில் உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இதுதான் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 கீழ், வேட்பாளர்கள் தங்கள் தகுதியை பற்றிய உண்மையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும். வயது என்பது அடிப்படை தகுதி என்பதால், அதில் தவறு நடப்பது சட்ட ரீதியான சிக்கலுக்கு வழிவகுக்கும். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நாளில், தேர்தல் நடத்தும் அலுவலர் விவரங்களை சரிபார்ப்பார். வயது என்பது எண் சம்பந்தப்பட்டது எனில், தட்டச்சு பிழையாக கருதி திருத்த வாய்ப்பளிக்கலாம். அல்லது மனுவை நிராகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது அலுவலரின் முடிவை பொறுத்தது.
சொதப்பிய விஜய்
கட்சி ஆரம்பித்து ஆண்டுக்கணக்கில் ஆகியும், ஒரு வேட்புமனுவை கூட சரியாக நிரப்பப்படவில்லை என்று விஜய் மீது விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஒருவேளை விஜய் டைம் டிராவல் செய்து வந்தாரோ? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. மறுபுறம் விஜய் ரசிகர்கள், தமிழ் ஆண்டு கணக்குப்படி விஜய்க்கு வயது 51, அதுவே ஆங்கில ஆண்டு கணக்குப்படி 52 என்று சமாளித்து வருகின்றனர்.
-
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications