திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?
திருச்சி: திருச்சியில் விஜய் செய்த சம்பவம்தான் இன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. திருச்சியே குலுங்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான ரோடு ஷோ நடைபெற்றது. வழக்கமாக விஜய் வருகிறார் என்றால அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுவது வாடிக்கைதான். அப்படித்தான் இன்றும் திருச்சியில் கூட்டம் அதிகரித்துவிட்டது. அப்போது ஒரு பெண் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.. அடுத்து என்ன நடந்தது?
முதன்முறையாக தேர்தல் களத்தில் விஜய் இறங்கியுள்ளதால், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் அவர் போட்டியிடும் தொகுதிகளின் மீது திரும்பியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜய், ஏற்கனவே கடந்த மார்ச் 30ம் தேதி பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து பணிகளைத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக கடந்த மார்ச் 31 அன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் திருச்சி சென்றடைந்தார்.
திருச்சி ரோடு ஷோ
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி அவர் தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டார். இந்த பயணத்தின்போதுதான் திருச்சியே குலுங்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான ரோடு ஷோ நடைபெற்றது.
விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சிறுவர்களும் பைக்குகளில் அணிவகுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் தவெக கட்சியின் கொடிகளையும், துண்டுகளையும் அவர் மீது வீசி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.
எகிறி குதித்து ஓடிய விஜய்
கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் புன்னகையுடன் கைகளை அசைத்தபடி வந்த விஜய், திடீரென பிரச்சார வேனின் முன் சீட்டில் இருந்து எழுந்து வேனின் டாப்பில் அதாவது மேற்கூரை மீது நின்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
அந்த சமயத்தில் கூட்டத்தின் நெருக்கடியால் பைக்கில் சென்ற பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைக் கவனித்த விஜய், ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஓடிக்கொண்டிருந்த பிரச்சார வாகனத்திலிருந்து கீழே குதித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பவுன்சர்கள், பதறியபடி வேனிலிருந்து கீழே குதித்து ஓடி வந்தார். தொண்டர்களும் அந்தப் பெண்ணை நோக்கி ஓடினார்கள்..
யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணின் அருகே சென்ற விஜய், அவரைத் தூக்கிவிட்டு ஆறுதல் சொன்னார்.. அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டுள்ளதா என்று அக்கறையுடன் விசாரித்து, அவர் ஆசுவாசமடைந்ததை உறுதி செய்தார்.. அதற்கு பிறகுதான் மறுபடியும் வாகனத்திற்குத் திரும்பினார். இதனை எல்லாம் தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
வைரலாகும் வீடியோ
இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர், தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ரோடு ஷோவின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது அனைத்தையும்விட, ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், விஜய்யின் இந்த நேரடி மக்கள் தொடர்பு உத்தி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications